இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!

Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள். 

Positive thinking : நல்லது நடக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். நீங்கள் எப்போதும் நேர்மறையாக சிந்திக்க தொங்குகிறீர்களோ அப்போது தான் எல்லா பிரச்சனைகளையும் திறம்பட எதிர்கொள்ள முடியும். 

 

1 /10

நேர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் அபரிமிதமான வலிமை, நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளலாம். அதனால் நேர்மறையாக சிந்திக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

2 /10

நல்ல விஷயங்களை திட்டமிடுதல் - நீங்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்றால் நாளை என்ன செய்ய வேண்டும் என்று இன்றே திட்டமிடுங்கள். நல்ல விஷயங்களை, கெட்ட விஷயங்களை என இரண்டாக பிரித்து அதில் நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். உங்களுக்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த திட்டமிடுதல் அவசியம். தேவையற்ற விஷயங்களை புறம் தள்ளிவிடுங்கள்.   

3 /10

உடல் மீது கவனம் - நீங்கள் ஆரோக்கிமான வாழ்க்கை வாழ்வதற்கு உங்கள் உடல் தான் முக்கியம். அதனால் தினமும் உங்கள் உடல் மீது அக்கறை செலுத்துங்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை பின்பற்றுங்கள்.   

4 /10

மன ஆரோக்கியத்துக்கு பிரத்யேகமான பயிற்சிகளை செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக இருப்பதாக நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மகிழ்ச்சிக்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் தினசரி அடிப்படையில் பின்பற்றுங்கள்.    

5 /10

இலக்குகளில் வெற்றி பெறுங்கள் - நீங்கள் உங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். அதற்கு சின்ன சின்ன இலக்குகளை தினசரி நிர்ணயிக்கவும். அதில் நீங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே வாருங்கள்.   

6 /10

நிச்சயம் இந்த பயிற்சி உங்களை பெரிய இலக்குகளில் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். தனிப்பட்ட திறமைகளும் இயல்பாகவே வளரத் தொடங்கும். மன நிலையும் வெற்றிக்கான பாதையில் பயணிக்க தொடங்கும்.   

7 /10

எதிர்மறை எண்ணங்களை வெற்றி பெறுதல் - எப்போது நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய தொடங்கும்போதும் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வளரத் தொடங்கும். 

8 /10

அப்போது அந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதனை வெற்றி கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். இதனை நீங்கள் தினமும் பின்பற்றி வந்தால் ஒரு கட்டத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றவே செய்யாது.   

9 /10

நேர்மறையான பேச்சுக்கள் - உங்கள் வாயில் வரும் வார்த்தைகள் அனைத்தும் நல்ல வார்த்தைகளாகவே இருக்க வேண்டும். நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். கடும் சொற்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடவும்.   

10 /10

அன்பாக பேசுங்கள். எதார்த்தமாக இருக்க முயற்சி செய்யவும். சில நேரங்களில் அமைதி தேவைப்பட்டால் அதனை கைடிபிக்க கற்றுக் கொள்ளுங்கள். வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவை என்பதை மனதில் கொண்டு பேசுங்கள். நிச்சயம் வாழ்கையில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.