7 Healthy Habits That Will Keep You Active : ஒரு சில காலைப்பழக்கங்கள் உங்களை அந்த நாள் முழுவதும் ஆக்டிவாகவும் எனர்ஜி நிறைந்தும் வைத்திருக்கும். அப்படிப்பட்ட பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
7 Healthy Habits That Will Keep You Active : நாம் நாள் முழுவதும் ஆக்டிவாகவும், உடலை சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், கண்டிப்பாக சில காலை பழக்கங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், உடலுக்கு நல்லது நிகழ்வதோடு, மனதிற்கும் நல்லது நடக்கிறது. நாள் முழுவதும் துருதுருவென இருக்க காலையில் எழுந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தூக்கம்: இரவில் 7 முதல் 8 மணி நேரம் நீங்கள் தூங்கியிருப்பது அவசியம். ரிலாக்ஸாக அவ்வளவு நேரம் உறங்கினால்தான் உங்களால் ஆக்டிவாக இருக்க முடியும்.
தண்ணீர் குடிப்பது: காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக ஓரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். இது, உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்குமாம்.
காலை உடற்பயிற்சிகள்: உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, மனநிலையை மேம்படுத்த காலையில் உடற்பயிற்சி செய்யலாம். அது, 5-10 நிமிடங்கள் வரை இருந்தால்கூட போதுமானது.
காலை உணவு: காலையில் சாப்பிடும் முதல் உணவு, உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்க வேண்டும். முட்டை, பழங்கள், ஓட்ஸ் ஆகியவை உங்கள் உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கிறது.
சூர்ய ஒளி: காலை வெயிலில் நிற்பது, உடலுக்கு கதகதப்பை கொடுத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். அது மட்டுமன்றி உங்களை விழிப்புடன் செயல்படவும் வைக்குமாம்.
கஃபைன் பானங்கள்: கஃபைன் பானங்களை அடிக்கடி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இது, உங்கள் உடலில் தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
மனநிறைவு கொள்ளுதல்: இப்போது உங்கள் வாழ்வில் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் கிடைத்திருக்கிறதோ, அதை நினைத்து மனநிறைவு கொள்ள வேண்டும். அதை தியானத்தின் வழியாக செய்யலாம். இது, உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி உணர்வை கொடுத்து அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.