சில நேரங்களில், குடும்பத்தினரும் நண்பர்களும் நம்மிடம் கடன் கேட்பது வழக்கம். அதனை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இருப்பினும் எப்படி நோ செல்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
யாராவது உங்களிடம் கடன் கேட்டால், உடனே நோ என்று சொல்லாதீர்கள். அதற்கு பதில், அவர்கள் சொல்வதை முழுமையாக கேளுங்கள். இது அவர்களின் நிலைமையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும். அதன் பிறகு புரியும்படி உங்களிடம் பணம் இல்லை என்று சொல்லுங்கள்.
கடன் கொடுப்பதற்கு முன் உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது, உங்கள் மாத செலவு என்ன என்பதை புரிந்து கொண்டு, இவ்வளவு பணத்தை தான் கடனாக கொடுக்க முடியும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கமிட்மெண்டை எடுத்து சொல்லி நோ சொல்லலாம்.
ஒருவருக்கு கடன் கொடுக்க விருப்பமில்லை என்றால் தயங்காமல் இல்லை என்று சொல்லிவிடுங்கள். பார்த்துவிட்டு சொல்கிறேன், அடுத்த முறை தருகிறேன் போன்ற பொய்யான வார்த்தைகளை கூற வேண்டாம்.
இப்போது கடன் கொடுக்க முடியாத காரணத்தை விளக்கி கூறுங்கள். குடும்ப பிரச்சனைகள் அல்லது திடீர் செலவுகள் போன்ற காரணங்களால் தற்சமயம் இல்லை என்று கூறுங்கள். இது உங்கள் நட்பை வலுவாக வைத்திருக்க உதவும்.
உங்கள் நெருங்கிய நண்பர் கடன் கேட்டும் கொடுக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பணம் கேட்டால் மக்கள் இல்லை என்று சொல்வது சகஜம். நீங்கள் அதை பற்றி அதிகம் சிந்தித்து மனமுடைய வேண்டாம்.
யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவ வேறு வழிகளை பற்றி எடுத்து சொல்லுங்கள். உதாரணமாக, பணத்தை எப்படி சேமிப்பது என்று சொல்லி கொடுக்கலாம் அல்லது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றி சொல்லலாம்.