7th Pay Commission Latest News Today: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை திரும்பிக் கிடைக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு ((AICPI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திற்கு குறைந்தது 4 சதவீத டி.ஏ. உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதில் ஒரு சுவாரசியமான திருப்பம் உள்ளதாகவும் தெரிகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தவுடன்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு தெளிவு கிடைக்கும்.
அகவிலைப்படி முடக்கத்தை ஜூலை 1, 2021 மத்திய அரசு நீக்கும் என கூறப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. DA முடக்கம் நீக்கப்பட்டால், DA உயர்வை ஒத்து அகவிலை நிவாரணம், அதாவது DR-ரும் உயரும். இதனால், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசின் சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். Source: PTI
DA முடக்கம் நீக்கப்பட்டவுடன், மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படும். இதில் 2020 ஜனவரி முதல் 2020 ஜூன் வரையிலும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும் அறிவிக்கப்பட்ட 3 சதவீதம் மற்றும் 4 சதவீத DA -வும் அடங்கும். ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரை அறிவிக்கப்பட்ட 4 சதவீத டி.ஏ.வும் இதில் அடங்கும். Source: PTI
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (2.57) அடைப்படை சம்பளத்தால் பெருக்கி, அகவிலையுடன் கூட்டி பின்னர் கணக்கிடப்படும். அகவிலைப்படி 17 முதல் 28 சதவீதமாக உயரும் போது, மத்திய அரசு ஊழியரின் மொத்த சம்பளமும் தானாக உயரும். இது தவிர அவர்களுக்கு DA அரியர் தொகையின் மூன்று தவணைகளும் அடங்கும். Source: PTI
மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்களுக்கும் DR மீட்டெடுக்கப்படும் நன்மை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகரிப்பது போலவே, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும். அகவிலைப்படி பற்றிய அறிவிப்பு வந்தவுடன், அகவிலை நிவாரணமும் அதிகரிக்கும். ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் அதிகரிப்பதோடு அவர்களுக்கு மூன்று தவணைகளுக்கான அரியர் தொகையும் கிடைக்கும். Source: PTI