உங்களை கீழே தள்ள நினைப்பவர்கள் யாரென்றே தெரியாது. அவர்கள் உங்களுடன் பழகும் ஆளாகவே இருக்கலாம். அவர்களை சமாளிக்க சில டிப்ஸ் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
நம்மை முதுகில் குத்த வருபவர்கள், எங்கிருந்து வருகின்றனர் எங்கு இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்கள், உங்களை வேண்டுமென்றே காலைப்பிடித்து கீழே தள்ள நினைப்பர். அவர்களிடம் நீங்கள் உஷாராக இருக்க 8 வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உங்களை வேண்டுமென்றே யாரேனும் குறைக்கூற நினைத்தால் அதை ஒரு மோட்டிவேஷனாக எடுத்துக்கொண்டு முன்னேறுவதற்கான வழியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்களை கீழே தள்ளி விட்டவர்கள் மீது இருக்கும் வெறுப்பு, ஆதங்கம் அல்லது கோபம் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அதை, மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு இருக்க கூடாது.
யார் உங்களை கீழே தள்ள நினைத்தாலும், உங்கள் பலம் மற்றும் சாதனைகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது, யார் என்ன நினைத்தாலும் உங்களை கீழே தள்ளினாலும் உங்கள் உணர்வுகள் புண்படாமல் இருக்கும்.
உங்கள் உடல் மற்றும் மனநலனில் கவனம் செலுத்த வேண்டும். தியானம் செய்வது, உங்களுக்கு பிடித்த ஹாபிக்களை பின்பற்றுவது ஆகியவை உங்களை நெகடிவிட்டியில் இருந்து தள்ளி வைக்கும்.
உங்களை யாரேனும் கோபப்படுத்த நினைத்தால், அவர்களிடம் கோபமாக ரியாக்ட் செய்யாமல் சாந்தமாக இருங்கள்.
உங்களை ஆதரிக்கும் மற்றும் ஆதரவு கொடுக்கும் மக்களை கூடவே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் நெகடிவிட்டியில் இருந்து தள்ளியிருக்க முடியும்.
உங்களை பிடிக்காதவர்கள் உங்களிடம் எல்லை மீறும் போது, அவர்களிடம் எல்லைக்கோடு வைப்பது மிகவும் அவசியம். அவர்களிடம் பேச வேண்டும் என்பதோ, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதோ அவசியம் இல்லை.
ஒருவர் உங்களை குறை கூறுகிறார் என்றால், அது அவர் மனதிற்குள் இருக்கும் குறைகளை காண்பிக்கிறது. எனவே, அதை நீங்கள் personal-ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம்.