GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..

The GOAT Movie Full Details : விஜய் நடிப்பில் நாளை மறுநாள் வெளிவர இருக்கு ‘தி கோட் ’ படத்தின் முழு விவரங்களையும் இங்கு பார்ப்போம். 

The GOAT Movie Full Details : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). முழு நேர அரசியலில் இறங்க இருக்கும் விஜய்க்கு கடைசி படங்களுள் ஒன்றாக, இப்படம் அமைந்திருக்கிறது. இதனால் இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் இரு தினங்களில் வெளியாக இருக்கும் இப்படம் குறித்த முழு விவரங்களையும் இங்கு பார்ப்போம். 

1 /8

2026ஆம் ஆண்டு அரசியலில் களம் காண இருக்கும் நடிகர் விஜய், தனது சினிமா பயணத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். இதன் காரணமாக, அனைத்து தரப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும், தி கோட் படத்தில் நடித்து இருக்கிறார். 

2 /8

நடிகர் விஜய்யையும், அஜித்தையும் பலர் போட்டி நடிகர்களாகவே பார்த்து வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில், விஜய் கோட் படத்தில் அஜித்தின் டைலாக்கையும், அஜித் குட் பேட் அக்லி படத்தில் விஜய்யின் டைலாக்கையும் பேசியிருக்கின்றனராம். 

3 /8

நடிகர் விஜய், இப்படத்தில் பல வருடங்கள் கழித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில், இளமையாக தோற்றமளிக்கும் விஜய்க்கு டீ-ஏஜிங் டெக்னாலஜி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அவர் பார்க்க புதியதாக இருந்தாலும், பலர் இத்தோற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்

4 /8

தி கோட் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், இப்படத்தின் ஜானர் என்ன என்பதும் கூறப்பட்டுவிட்டதாம். ஆனால், அதை யாருமே சரியாக டீ-கோட் செய்யவில்லை என்று படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியிருக்கிறார். 

5 /8

தி கோட் படத்தின் ஆரம்ப 60 விநாடிகள் காட்சிகள் மிஸ் பயங்கரமாக இருக்கும் என பிரேம்ஜி தெரிவித்திருக்கிறார். இதனால், இப்படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும் என பலர் காத்துக்கொண்டுள்ளனர். 

6 /8

தி கோட் படத்தில் பல விஜய் மற்றும் அஜித் படங்களின்  ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டுள்ளதாம். வெங்கட் பிரபு இயக்கிய படங்களின் ரெஃபரன்ஸும் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. 

7 /8

இப்படத்தில், இளையராஜா இசையில் விஜய் முன்னர் நடித்திருந்த படத்தின் பாடல் இடம் பெற்றுள்ளதாம். அது என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். 

8 /8

தி கோட் படத்தின் பட்ஜெட் 400 கோடி, அதில் விஜய்யின் சம்பளம் மட்டும் சுமார் 200 கோடி என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். இதில், தோனி கிரிக்கெட் ஆடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அவர் வரும் காட்சியில் திரையரங்கமே அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.