சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு! ஸ்ரீலங்கா செல்லும் பத்திரனா, தீக்ஷனா!

PBKS vs CSK: தீபக் சாஹர் காயம். மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல உள்ளனர். என்ன செய்ய போகிறது சென்னை அணி?

 

1 /5

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 1ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  

2 /5

இந்நிலையில், சென்னை அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் மதீஷா பத்திரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் காரணமாக விளையாடவில்லை.  

3 /5

மதீஷா பத்திரனா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் டி20 உலக கோப்பைக்கான விசா சம்பந்தமான விஷயங்களுக்காக தங்கள் நாட்டிற்கு செல்ல உள்ளனர்.  இருப்பினும் அடுத்த போட்டிக்கு முன் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /5

மேலும், பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக தீபக் சாஹர் பாதியில் வெளியேறினார். தனது முதல் ஓவரை கூட முழுதாக வீசவில்லை. இதனால் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான்.   

5 /5

மேலும், பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அவரது நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.  துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான்.