மேகா ஆகாஷின் வருங்கால கணவர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!

Actress Megha Akash Husband To Be Saai Vishnu Details : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மேகா ஆகாஷ். இவர், சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் யார் தெரியுமா? 

Actress Megha Akash Husband To Be Saai Vishnu Details : பேட்ட படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, தற்போது கோலிவுட் திரையுலகின் முக்கிய நடிகையாக வளர்ந்து நிற்பவர், மேகா ஆகாஷ். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மென்மையான குரலும், அலட்டல் இல்லாத நடிப்பும் பலரையும் கவர்ந்திருக்கிறது. சமீபத்தில், சாய் விஷ்ணு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. சைலண்டாக இவர்கள் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவரை கரம் பிடிக்க இருப்பதாகவும் மேகா ஆகாஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சாய் விஷ்ணு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வந்த வண்ணம் இருக்கிறது. இவர் யார் தெரியுமா? 

1 /8

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர், மேகா ஆகாஷ். இவரை கோலிவுட் ரசிகர்கள் முதன்முதலில் பேட்ட படத்தில்தான் பார்த்தனர். இந்த படத்தில் இவரது கதாப்பாத்திரம் முக்கியமானதாக இருந்ததால், இவர் பலரால் அறியப்பட்டார். 

2 /8

மேகா ஆகாஷ், தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். டோலிவுட்டிலும் இவர் நடித்த படங்கள் ஹிட் ஆகியிருப்பதால் இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். 

3 /8

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் இவரை பார்த்து ரொமான்ஸ் செய்ததை விட, ரசிகர்கள் பலர் இவரை பார்த்து ரொமாண்டிக் லுக் விட்டனர். மென்மையான பேச்சு மற்றும் அழகான சிரிப்பு இவரிடம் ஹைலைட்டாக இருப்பதால் அது பலரை கவர்ந்துள்ளது. 

4 /8

மேகா ஆகாஷ், சில நாட்களுக்கு முன்பு தனக்கு சாய் விஷ்ணு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருப்பதாக அறிவித்தார். இது ஒரு சிலருக்கு இன்ப அதிர்ச்சியாகவும் ஒரு சிலருக்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்தது. 

5 /8

மேகா ஆகாஷும் சாய் விஷ்ணுவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மேகா ஆகாஷ் நடிகையாக இருப்பதால் இவர் குறித்த தகவல்கள் ரசிகர்களுக்கு தெரிந்தது. ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளும் சாய் விஷ்ணு குறித்து, நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. 

6 /8

சமீபத்தில் சாய் விஷ்ணுவும், மேகா ஆகாஷும் தங்களின் குடும்பத்தினருடன் சென்று நடிகர் ரஜினிகாந்திடம் திருமண பத்திரிக்கையை கொடுத்தனர். அப்போதுதான் சாய் விஷ்ணு யார் என்பது குறித்த தகவல்கள் தெரிய ஆரம்பித்தது. 

7 /8

மேகா ஆகாஷை திருமணம் செய்யும் சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2வது மகன். இவர், லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்ததோடு வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடர்பான படிப்பையும் முடித்திருக்கிறார். 

8 /8

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களிலும் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறாராம். இந்த தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதால் பலர் “இவர் இப்படிப்பட்டவரா..?” என்று தங்களது ஆச்சரியத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். மேகா ஆகாஷ்-சாய் விஷ்ணுவின் திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி அதற்கு மறுநாளான 15ஆம் தேதி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.