30 ஆண்டுக்குப் பின் கும்ப ராசியில் சனி.. இந்த ராசிகளுக்கு திடீர் திருப்பம், ராஜயோகம்

Sani Peyarchi December 2023: வருகின்ற 20 ஆம் தேதி அதாவது இன்னும் 2 நாட்களில் சனிபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடக்க உள்ளது. எனவே சனியின் இந்த அமைப்பால் எந்தெந்த ராசியினருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது வரும் மார்கழி மாதம் அதாவது வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி, மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் லாப சனி என பலன்கள் கிடைக்கும்.

மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். எனவே இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகள் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் அதிகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /6

மேஷம்: மேஷ ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், புதிய வாய்ப்புகளையும் பெற்றிடலாம். அத்துடன் கடின உழைப்புக்கு முழு பலன் சிறப்பாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவும். உங்கள் மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொறுமையாக பேசி தீர்க்க மன நிம்மதி பெற்றிடலாம்.  

2 /6

ரிஷபம்: சனி பகவான் பெயர்ச்சி நீங்கள் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது.   

3 /6

சிம்மம்: சனி பகவானின் பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு பல விதத்தில் நன்மைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். பண பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் திருமணம், காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்ற பணிகளை பெற்றிடலாம். உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும்.  

4 /6

துலாம்: சனி பகவானின் பெயர்ச்சியால் லாம் ராசியினருக்கு பல விதத்தில் சாதகமானதாக அமையும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் முதலீடுகள் மூலம் லாபத்தையும், முதலீடுகள் செய்யவும் சாதகமானதாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சில நல்ல செய்திகளைப் பெற்றிடலாம்.  

5 /6

விருச்சிகம்: சனிபகவான் உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி. இதனால் இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.  

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.