அஜீத்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு இந்த தேதியில் இருந்து தொடக்கம்!

இந்திய சினிமாவில் அதிகம் பின்தொடரும் நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

 

1 /5

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எச்.வினோத் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'துணிவு' அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.  மறுபுறம் உலக சுற்றுப்பயணத்திலும் அஜித் பிசியாக உள்ளார்.    

2 /5

அஜித்தின் அடுத்த படமான 'விடாமுயற்சி' பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்க இருந்தது. சில காரணங்களால் தள்ளி போனது. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி தனது திரைக்கதையை முடித்துவிட்டதாகவும் நியூஸ் வந்துள்ளது.  

3 /5

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

4 /5

அஜீத் ஏற்கனவே நவம்பரில் தனது உலக பைக் பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார், அதை மனதில் வைத்து அவரது அனைத்து பகுதிகளும் அதற்கு முன் படமாக்கப்படும். 2024 கோடையில் படம் திரைக்கு வரும் என்று ஏகே ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.  

5 /5

'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏகே இரட்டை வேடங்களில் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகிறது.