Health Tips: இந்த செய்தியை படிச்சா பூசணி விதைகளை தூக்கி எறிய மாட்டீங்க!

பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம்,  இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. 

1 /4

பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆற்றல் சீராக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் வேலை பளுவின் காரணமாக ஆற்றல் குறைவாகவே உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இது ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

2 /4

பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை புற்று நோயை தடுக்க உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

3 /4

பூசணி விதைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும் அதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 

4 /4

பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைத் தடுக்கும், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.)