OnePlus Nord 2 x PAC-MAN: புத்தம் புதிய போனின் அசத்தும் புகைப்படங்கள்

OnePlus Nord 2 x PAC-MAN பதிப்பு: உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான OnePlus சமீபத்தில் OnePlus Nord 2 × PAC-MAN பதிப்பு என்ற OnePlus Nord 2 இன் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியது.

1 /5

இந்தியாவில் ரூ.37,999 என்ற விலையில், OnePlus Experience Stores, OnePlus.in மற்றும் Amazon ஆகியவற்றில் இந்த போன் விற்கப்படும். பயனர்கள் தங்கள் OnePlus Nord 2 x PAC-MAN பதிப்பை வாங்கும் போது 2000 ரூபாய் கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். Amazon இல், Citibank பயனர்கள் 1000 ரூபாய்க்கான உடனடி வங்கி தள்ளுபடியையும் 3 மற்றும் 6 மாத EMI ஆப்ஷன்களில் 1250 ரூபாய் தள்ளுபடியையும் பெறலாம்.

2 /5

OnePlus Nord 2 × PAC-MAN பதிப்பில் 90Hz ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே, இரண்டு 5G சிம் கார்டு ஸ்லாட்டுகள் மற்றும் OxygenOS 11.3 உடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் டூயல் செல் பேட்டரி உள்ளது.

3 /5

OnePlus Nord 2 × PAC-MAN பதிப்பு MediaTek Dimensity 1200-AI சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் கூடுதலாக, OnePlus Nord 2 × PAC-MAN பதிப்பில் உள்ள MediaTek Dimensity 1200-AI சிப்செட் அசல் OnePlus Nord ஐ விட 65% வேகமான CPU செயல்திறனையும் 125% மேம்படுத்தப்பட்ட GPU செயல்திறனையும் வழங்குகிறது. இதன் பின்புறத்தில் 50MP AI டிரிபிள் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் Sony IMX766 சென்சார் திறன் கொண்டது.

4 /5

OnePlus Nord 2 x PAC-MAN பதிப்பு DIY PAC-MAN ஃபோன் ஹோல்டருடன் வருகிறது. இதில் ஆர்கேட் கிளாசிக்கின் பிரபலமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது தனிப்பயன் மற்றும் டைனமிக் வால்பேப்பர்களுடன் வருகிறது.

5 /5

கஸ்டம் கேமரா பில்டர், கஸ்டம் அனிமேஷன்கள், PAC-MAN 256 விளையாட்டுகள் ஆகியவை இதில் உள்ளன. போனில் ரிங்டோன்கள், புகைப்பட ஸ்டிக்கர்கள் மற்றும் இன்னும் PAC-MAN உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.