’100 ரூபாய்க்கு கெஞ்சியிருக்கிறேன்’ அனிதா சம்பத் உருக்கம்

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் ஃபேவரைட் ஆக ஆகியிருந்தார்.

1 /8

தற்போது பல திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி அதை குறித்து உருக்கமான பதிவுகளையும் வெளியிட்டு இருந்தார்.   

2 /8

அனிதா சம்பத்தின் அப்பாவான எழுத்தாளர் சம்பத் அனிதா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியான சில நாட்களில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் தான் மரணம் அடைந்திருந்தார்.   

3 /8

அது அனிதா சம்பத்தை பெரிய அளவில் பாதித்து இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனிதா சம்பத்து பேசி வருகிறார். இதைக் குறித்து ஒரு சிலர் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் பலருக்கும் இது மோட்டிவேஷனல் ஆகவும் இருந்து வருகிறது.   

4 /8

ஆரம்ப காலத்தில் இவ்வளவு கஷ்டங்களையும் போராட்டங்களையும் தாண்டி இன்று தன்னுடைய வாழ்க்கையில் அடியெடுத்து மகிழ்ச்சியாக பயணிக்கிறார் என்றார் அதற்கு தைரியம் அதிகமாக தான் இருக்க வேண்டும் என்று பாராட்டியும் வருகின்றனர்.  

5 /8

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் நேரத்தில் என்னிடம் பஸ்க்கு கூட காசு இல்லாமல் பல நேரம் நான் தவித்து இருக்கிறேன்.   

6 /8

அந்த நேரத்தில் திடீர் செலவு என்று ஏதாவது வந்துவிட்டால் ஒரு 100 ரூபாய் கூட கையில் இல்லாமல் நான் தவித்து இருக்கிறேன். அப்போது கூட இருப்பவர்களிடம் பணத்துக்காக கெஞ்சி இருக்கிறேன் ஆனால் பலர் என்னை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று பல வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.  

7 /8

மேலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பெரிய டிவி சேனலில் வேலை பார்க்கிறார். செய்தி வாசிப்பாளர்களாக இருக்கிறார் செய்தி வாசிக்கும் போது சிரித்த முகமாகவும் எந்த கவலையும் இல்லாமல் தானே இருக்கிறார் இவருக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்று நினைப்பார்கள்.  

8 /8

ஆனால் நமக்கு இருப்பது நமக்கு தான் தெரியும் என்று தன்னுடைய வேதனையை தெரிவித்திருக்கும் வீடியோ தற்போது தற்போது ரசிகர்கள் அதிகமான கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.