வயசானாலும் இளமையாக இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சூப்பர் உணவுகள்

Anti Aging Foods: ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கிறது. முதுமையின்அறிகுறியாக,  சருமத்தில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், காது கேளாமை,மூட்டுகளில் வலி,  போன்ற  பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், முதுமையை விரட்ட உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

ஆரோக்கியமான உணவு பழக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இளமை நீங்காமல் இருக்கவும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.

 

1 /9

Anti Aging Foods:  என்றும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாக இருக்கும். கொலாஜன் நிறைந்த உணவுகள்  ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு,  செல் மீளுருவாக்கம் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் முதுமை அண்டாமல் இருக்கும். என்றும் இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய சில கொலாஜன் நிறைந்த உணவுகளை அறிந்து கொள்ளலாம்.  

2 /9

சிட்ரஸ் நிறைந்த பழங்கள்: வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு திராட்சை, எலுமிச்சை ஆகியவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  

3 /9

பூண்டு: சல்பர் சத்து அதிகம் உள்ள பூண்டு, உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதோடு, கொலோஜன் சத்து இழக்காமலும் பாதுகாக்கிறது.

4 /9

பீன்ஸ் வகைகள்: ராஜ்மா காராமணி போன்ற பீன்ஸ் வகைகள் தாமிரச்சத்து நிறைந்தவை. கொலாஜன் உற்பத்திக்கு தாமிரச்சத்து அவசியம்.  

5 /9

முந்திரி பருப்பு: துத்தநாகம் சத்து மற்றும் தாமிரச்சத்து நிறைந்த முந்திரி பருப்பு உடலில் கொலாஜன் உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்கிறது.

6 /9

தக்காளியில் உள்ள லைகோபீன் சருமத்தை ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இது நிறமி, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. தக்காளி சாப்பிடுவது கொலாஜனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த சருமத்தையும் குணப்படுத்துகிறது.  

7 /9

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: பீட்டா கரோட்டின்,வைட்டமின் சி மற்றும் ஈ  நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து செல்கள் இளமையாக இருக்க உதவுகிறது.

8 /9

முருங்கை, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு அற்புதமான சூப்பர்ஃபுட். முருங்கைக்காயில் உள்ள குளோரோபில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனையை  தடுக்கிறது.  

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.