சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் பொற்காலம், சனி அருளால் அனைத்திலும் வெற்றி

Sani Peyarchi Palangal: புத்தாண்டு 2025 -இல் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அபரிமிதமான நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு இது பொற்காலமாய் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

புத்தாண்டு 2025 ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான ஆண்டாக கருதப்படுகின்றது. இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றவுள்ளன. குறிப்பாக முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படும் சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் இந்த ஆண்டு நடக்கவுள்ளன.  

2 /10

அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். மார்ச் மாதம் அவர் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.

3 /10

மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால், அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களது வாழ்வில் இருந்த தொல்லைகள் நீங்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /10

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், குரு பகவானின் அருளும் ரிஷப ராசிக்காரர்கள் மீது பொழியும். உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து பணிகளும் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் அன்பைப் பெறுவீர்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். ஆன்மீக யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு.

5 /10

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்ச்யின் தாக்கம் சாதகமான பலன்களை அளிக்கும். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால், மிதுன ராசிக்காரர்களுக்குப் புத்தாண்டில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை வலுப்பெறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். குடும்பம் மற்றும் உறவுகளில் இனிமை இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில்  முன்னேற்றமும் செழிப்பும் இருக்கும். நல்ல வருமானம் ஈட்டுவதுடன் திருமண வாழ்வில் இனிமையும் உண்டாகும்.

6 /10

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருள் பொழிவார். துலாம் ராசிக்காரர்கள் சனி அருளால் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எதிரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். நீதிமன்ற அலுவலக விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மன உளைச்சல் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் கூடும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். புகழ் உயரும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் விரும்பிய பலன் கிடைக்கும்.

7 /10

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மகர ராசிக்காரர்கள் அனைத்து விதமான இன்பங்களையும் அனுபவிப்பார்கள். மகர ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரமாக இது இருக்கும். முதலீடுகள் மிகவும் லாபகரமாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

8 /10

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும்.

9 /10

சனி பகவானின் பரிபூரண அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.