தீபாவளியன்று மாலையில் செய்யும் இந்த வேலைகள் செல்வத்தை தொலைத்துவிடும்! ஜாக்கிரதை

Festival Alert: மத நம்பிக்கைகளின்படி, தீபாவளி நாளன்று இரவு நேரத்தில் செய்யும் பூஜையால் அன்னை லட்சுமி தேவி மகிழ்ந்து செல்வத்தை அள்ளிக் கொடுப்பாள். ஆனால், லட்சுமிதேவியின் ஆசீர்வாதங்களுக்கு பதிலாக கோபத்தை பெற்றுத் தரும் 3 செயல்கள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? 

மற்ற நாட்களில் எப்படியிருந்தாலும் தீபாவளியன்று தவறுதலாக கூட செய்யக்கூடாத மூன்று விஷயங்கள் இவை... 

1 /8

இந்து மதத்தில், தீபாவளி பண்டிகை மிகுந்த பக்தி பரவசத்துடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், லட்சுமி தேவியையும், விநாயகப் பெருமானையும் இரவில் வழிபடும் மரபு உள்ளது. லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம், பணப்புழக்கம் ஆண்டு முழுவதும் இருக்குக்ம். சுப பலன்கள் கிடைக்கும். 

2 /8

லட்சுமி தேவியின் அருளால், ஒருவரது வாழ்வில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் நீங்கும், ஆனால், தீபாவளியன்று தவறுதலாக கூட செய்யக் கூடாத சில விஷயங்களை செய்தால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகலாம்

3 /8

தீபாவளியன்று மாலை வேளையில் விளக்குமாறு எடுத்து வீடு கூட்டக்கூடாது. அது லட்சுமி கடாட்சத்தை துடைத்துவிடும். துடைப்பக்கட்டை என்று சொல்லும் சீமாறு சுத்தப்படுத்த உதவினாலும், இன்று இரவு அதை பயன்படுத்தினால், செல்வம் வீட்டில் இருந்து துடைத்துச் செல்லப்படும்

4 /8

தீபாவளியன்று பொழுதுபோக்காக சீட்டாட்டம் விளையாடுவது மிகவும் தவறு. இது செல்வத்தை போக்கும்

5 /8

தீபாவளி மட்டுமல்ல, என்றுமே பெண்களை மதிப்பது மிகவும் அவசியமானது. பெண்களை மதிக்காதவர்கள் வீட்டிலும், பெண்களின் கண்ணீர் சிந்தும் இடத்திலும் லட்சுமிதேவி வாசம் செய்யமாட்டார்

6 /8

இந்த மூன்று தவறுகளைத் தவிர்த்து, அன்னையை வணங்கினால் அனைத்து செல்வட்ங்களும் வந்து சேரும்

7 /8

உணவுக்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்க இன்று அன்னை அன்னபூரணியை வழிபடவேண்டும்

8 /8

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை  உறுதிப்படுத்தவில்லை