சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அலைச்சல், இழப்பு, நஷ்டம்.. சூதானமா இருங்க!!

Shani Vakri, Impact on Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்போது, ​​கிரகங்களின் சேர்க்கை, கோள்களின் நேர் மற்றும் தலைகீழ் இயக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது. 

கிரகங்களின் இயக்கம், பெயர்ச்சி மற்றும் பிற கிரகங்களுடனான சேர்க்கைகள் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் கிரகமான சனி பகவானின் மாற்றங்களால் வரும் தாக்கம் பொதுவாக அதிகமாக இருக்கும்.

1 /6

சனி வக்ர பெயர்ச்சி: தற்போது இந்த நேரத்தில் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். ஜூன் 17 முதல் நவம்பர் 4 வரை இந்த ராசியிலேயே அவர் வக்ர நிலையில் சஞ்சரிப்பார். 

2 /6

ராசிகளில் இதன் தாக்கம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும், இருப்பினும், சில ராசிக்காரர்கள் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். 

3 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி கடினமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், கண்டிப்பாக யாரிடமாவது ஆலோசனை செய்யுங்கள். காதல் உறவில் டென்ஷன் இருக்கும்.

4 /6

விருச்சிகம்: மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மீது மனக்கசப்பு ஏற்படலாம். பணி இடத்தில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவும். இந்த நேரத்தில் யாரிடமும் கடன் வாங்க வேண்டாம்.

5 /6

மகரம்: மகர ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பொய் சொல்வது உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். சனி தேவரின் பிற்போக்கு இயக்கத்தால் உங்கள் தாயின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலை கொள்ள நேரிடலாம். எனினும், தாயை நன்றாக பார்த்துக்கொண்டால் பிரச்சனை ஏற்படாது. இதனுடன், மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.