சனி நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பாதகமான காலம்: சூதானமா இருங்க!!

Shani Nakshatra Peyarchi:சனி பகவான் தற்போது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில்தான் நட்சத்திர பெயர்ச்சி செய்து ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதியாவார். தற்போது சனி ராகுவின் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால் ஒரு வகையில் ராகு சனி சேர்க்கை நடந்துள்ளது. ராகு மற்றும் சனியின் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் காணப்படும். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை தரும். அக்டோபர் 2023 வரை இந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /5

கடக ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி பல பிரச்சனைகளை தரும். இந்த ராசியின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிகரித்த செலவுகள் நிதிநிலையை கெடுக்கும். 

2 /5

சனியின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசியினருக்கு பொருளாதாரச் சிக்கலைத் தரும். ஆகையால் பண பரிவர்த்தனைகள் தொடர்பான முடிவுகளை நன்றாக யோசித்த பிறகே எடுக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் மனவருத்தம் ஏற்படலாம். 

3 /5

விருச்சிக ராசிக்கார்ரகளுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தரும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஊதாரித்தனம் அதிகரித்துக் கொண்டே போகும். 

4 /5

கும்ப ராசிக்கு அதிபதியான சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுவின் நட்சத்திரத்தில் சனி செல்வதால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள மின்சாதனங்கள் மீண்டும் மீண்டும் பழுதடையும். 

5 /5

மீன ராசிக்கார்ரகள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தின் கீழ் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பதால், அக்டோபர் வரை மீன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். சில பொருட்களை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

You May Like

Sponsored by Taboola