நரம்பு பிரச்சனைக்கு வைட்டமின் பி12 நிறைந்த சூப்பர் சைவ உணவுகள்

Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி 12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும், ஏனெனில் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. இது தவிர, டிஎன்ஏ, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியம். பொதுவாக வைட்டமின் பி12 இயற்கையாகவே அசைவ உணவுகளில் காணப்பட்டாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு அதன் குறைபாடு இருக்கலாம். ஆனால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் சில சைவ உணவுகள் வைட்டமின் பி 12 குறைப்பாட்டை நீக்க உதவும். அவை எந்தெந்த உணவுப் பொருட்கள் என்பதை பார்ப்போம்.

1 /6

முட்டை சாப்பிடுவதால் வைட்டமின் பி12 போதுமான அளவு கிடைக்கும். மேலும் இது சிறந்த நரம்பியல் செயல்பாட்டை பராமரிக்கவும், சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்கவும் மிகவும் முக்கியமானது.  

2 /6

பாலுடன், தயிரை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டையும் போக்கலாம். இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு நரம்பியல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சைவ உணவு உண்பவர்கள் தொடர்ந்து பால் மற்றும் தயிர் உட்கொள்ள வேண்டும்.  

3 /6

பசுவின் பாலில் வைட்டமின் பி12 இயற்கையாகவே போதுமான அளவு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சைவ உணவு உண்பவர்கள் இந்த பாலை உட்கொள்ள வேண்டும்.  

4 /6

வலுவூட்டப்பட்ட பழச்சாறு சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 இன் முக்கிய ஆதாரமாகும். இந்த வகை சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த அத்தியாவசிய வைட்டமின் குறைபாட்டை சமாளிக்கலாம். இதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது.  

5 /6

சோயா பால் வைட்டமின் பி 12 ஐ வழங்குகிறது. பால் பொருட்களை உட்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். வளர்சிதை மாற்றம் மற்றும் சிறந்த நரம்பு செயல்பாட்டை பராமரிப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.  

6 /6

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.