சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!

Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. சனி பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த ஆண்டு மகர ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆனார். கும்பத்தில் சனியின் பெயர்ச்சி ஷஷ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இது 12 ராசிகளின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனி சுமார் இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருப்பார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 மார்ச் 29ம் தேதி அவர் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அதுவரை சில ராசிகளுக்கு ராஜவாழ்க்கையும், சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் இருக்கும். கும்பத்தில் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் எப்படி இருக்கும் என்பத இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனி பெயர்ச்சியால் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இவர்களுக்கு திடீரென பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். 2025 மார்ச் வரையிலான காலத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக கொண்டாடுவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

2 /13

ரிஷபம்: சனி பெயர்ச்சி காலம் ரிஷப ராசிக்காரர்க்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் தற்போது அதிகப்படியான லாபத்தை காண்பார்கள். எனினும் இந்த நேரத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய வருமான வழிகள் திறக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நம்பி ஏமாறும் சூழ்நிலை ஏற்படலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது.

3 /13

மிதுனம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. எனினும் அனைத்து செலவுகளும் சுபச் செலவுகளாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சனி பெயர்ச்சியால் திடீரென்று சிக்கல்கள் அதிகரிக்கும். பணம் சம்பந்தமான விஷயங்களில் தொடர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனினும் 2025 தொடக்கத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

5 /13

சிம்மம்: கும்ப ராசியில் சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். அலுவலகப் பணிகளில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். 

6 /13

கன்னி: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியிம் அமைதியும் இருக்கும். 

7 /13

துலாம்: சனி பகவான் கும்ப ராசியில் இருப்பது துலா ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். சனி பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். அனுகூலுமான நன்மைகள் ஏற்படும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு இது மிக நல்ல நேரம். 

8 /13

விருச்சிகம்: ஷஷ ராஜயோகம் விருச்சிக ராசியினரின் வாழ்வில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். நிதி நிலை மேம்படும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கலாம். இந்த ராசிக்காரர்கள் ரியல் எஸ்டேட் மூலம் பலன் பெறலாம். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், சனி பெயர்ச்சியின் காலகட்டத்தில் அவ்வாறு செய்வது பலனளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பல நன்மைகளைப் பெறலாம்.

9 /13

தனுசு: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மரியாதை, கௌரவம் உயரும். பெரியவர்களுடன் உறவை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சனி பெயர்ச்சியால் உருவான சஷ ராஜ யோகத்தின் தாக்கத்தால் நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும். வெளிநாட்டில் இருந்து செல்வம் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயிலிருந்து விடுபடலாம். நீதிமன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சனிபகவானின் அருளால் எதிர்மறை ஆற்றல் நீங்கும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சி காலத்தில் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். 2025-ம் ஆண்டுக்குள் சனியின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு முழு ஆதரவைத் தரும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் இருந்த குழப்பங்கள் இப்போது முடிவுக்கு வரலாம். 

12 /13

மீனம்: தற்போது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கியுள்ளது. இந்த சனி பெயர்ச்சி காலத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.