மெகா ஏலத்தில் இவர்களின் விலை எகிறப்போகிறது... மிரட்ட காத்திருக்கும் 3 பாஸ்ட் பௌலர்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் அதிக விலைக்கு இந்த 3 வீரர்கள்தான் எடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் குறித்து இதில் காணலாம். 

  • Sep 04, 2024, 21:50 PM IST

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விதிகள் குறித்த அறிவிப்பு எப்போது வரும் எனவும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

1 /8

ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை இதுதான் நடக்கும், இவர் இந்த தொகைக்குதான் ஏலம் போவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.   

2 /8

யார் மீது எந்தெந்த அணிகள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதே அந்த வீரரின் பெயர் மேடையில் உச்சரிக்கும்போதுதான் நிச்சயமாக தெரியும் எனலாம்.   

3 /8

இருப்பினும், சில விஷயங்களை உங்களால் உறுதிப்பட கூற முடியும். இந்தந்த வீரர்கள், இந்த பிரிவில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை கிரிக்கெட் ரசிகர்களாலேயே கணிக்க முடியும்.   

4 /8

அப்படியிருக்க, வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திலும் (IPL 2025 Mega Auction) பல வீரர்களை நம்மால் அப்படி கூற முடியும். அந்த வீரர்களை அணிகள் தக்கவைக்காமல் ஏலத்திற்கு விடுவிக்கும்பட்சத்தில் அவர்கள் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் எனலாம்.   

5 /8

இந்நிலையில், ஐபிஎல் 2025 (IPL 2025) மெகா ஏலத்தில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் (Fast Bowlers) அதிக விலைக்கு போகக்கூடிய இந்த மூன்று வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.   

6 /8

ஜெரால்ட் கோட்ஸி: மும்பை அணியால் ரூ. 5 கோடிக்கும் மேல் கடந்த மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜெரால்ட் கோட்ஸியை (Geralad Coetzee) அந்த அணி நிச்சயம் தக்கவைக்காது. எனவே, அவர் ஏலத்திற்கு வரும்போது பல அணிகள் எடுக்க முயற்சிக்கும். இவரின் வேகம் பல அணிகளுக்கு தேவைப்படும். உதாரணத்திற்கு லக்னோ, குஜராத் அணிகள் ஆர்வம் காட்டும்.   

7 /8

மிட்செல் ஸ்டார்க்: கடந்த மினி ஏலத்திலேயே இவர் ரூ. 20 கோடிக்கும் மேல் விலை போனார், மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc). இவரை கொல்கத்தா அணி தக்கவைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இவர் ஏலத்திற்கு வரும்போது சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி தொடங்கி பல அணிகளும் முட்டிமோதும். இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு என்றுமே மவுசு குறையாது.     

8 /8

ஜோஷ் ஹேசில்வுட்: கடந்தாண்டு மினி ஏலத்தில் ஹேசில்வுட் (Josh Hazlewood) பங்கேற்கவில்லை. நிச்சயம் இந்த மெகா ஏலத்திற்குள் அவர் வரும்போது சிஎஸ்கே, ஆர்சிபி, கொல்கத்தா அணிகள் எடுக்க முயற்சிக்கும். இவரும் பெரிய தொகைக்கு ஏலம் போவார்.