இந்திய அணிக்கு அடுத்து 2 ஐசிசி கோப்பைகள் பார்சல்... என்ட்ரி கொடுக்கும் மிரட்டல் வீரர் - வந்தது அப்டேட்!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி, காயத்தில் இருந்து மீண்டு எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

  • Jul 22, 2024, 17:00 PM IST

ஷமி இந்திய அணியில் இணையும் போது வேகப்பந்துவீச்சு யூநிட் என்பது வலுவடையும்.

1 /8

இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று தனது 11 வருட தவத்தை முடித்துக்கொண்டது. இதற்கு முன் 2013ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன் டிராபியை இந்தியா வென்றிருந்தது.   

2 /8

தற்போது டி20யில் உலகக் கோப்பையை வென்ற கையோடு அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை கைப்பற்றவும் இந்திய அணி உறுதிபூண்டுள்ளது.   

3 /8

தற்போது கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை பெற்ற பின்னர், இந்த இரண்டு ஐசிசி கோப்பைகளையும் தூக்கும் வெறியோடு இந்திய அணி உள்ளது.  

4 /8

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி மோத உள்ளது.   

5 /8

அதிலும் பல டி20 மற்றும் ஓடிஐ போட்டிகளுடன் 10 டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிகளை வெல்வதன் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறும் வாய்ப்பும் அதிகமாகும்.   

6 /8

வங்கதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் தொடர்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியா விளையாடுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த கம்பீரும் இந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாட முயல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.   

7 /8

மேலும் டெஸ்ட் அணியில் இடம்பெறும் வீரர்கள் துலீப் டிராபி தொடரிலும் விளையாட வேண்டும் என்றும் கம்பீர் - அகர்கர் இணை தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க டெஸ்ட் போட்டிகளுக்கும் சரி, அடுத்தாண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் வலுவான வேகப்பந்துவீச்சு படை. அதற்கு சிராஜ், அர்ஷ்தீப், பும்ரா உடன் ஷமி இணைந்தால் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு வேற லெவலுக்கு போகும்.   

8 /8

இந்நிலையில் ஷமி எப்போது இந்திய அணியில் இணைவார் என்பது குறித்து இன்று கௌதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"ஷமி பந்துவீச தொடங்கியிருக்கிறார். முதல் டெஸ்ட் செப்டம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. அதுவே எப்போதும் டார்கெட்டாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க முடியுமா என்பதற்கு நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்" என்றார். கடந்த அக்.19ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப்போட்டிதான் ஷமி விளையாடிய கடைசி போட்டியாகும்.