சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... முழு ராசிபலன் இதோ

Sani Nakshatra Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய அசைவுகளும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. 

Sani Nakshatra Peyarchi Palangal: சனி பகவான் தற்போது அவரது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில் சனி ஏப்ரல் 06, சனிக்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். அக்டோபர் 3ம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் இருபார். சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளின் வாழ்வில் சுபிட்சம் பெருகும். பல வித நன்மைகள் நடக்கும். 12 ராசிகளிலும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களின் இலக்குகளை துல்லியமாக அறிய வைக்கும். இப்போது அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொண்டால் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

2 /13

ரிஷபம்: ரிஷபம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக இருக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் எதிர்பாராத முன்னேற்றம் காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடினால் நல்ல வேலை கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால் அதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உறவினர்களுடனான புரிதல் அதிகரிக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் காலம் சாதகமாக இருக்கும்.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன்னர் யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலையை பராமரிப்பது சவாலாக இருக்கலாம். நிதி நெருக்கடி வர வாய்ப்புள்ளது. 

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அள்ளித் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது பயணங்களை மேற்கொள்ளுங்கள். புதிய வீடு அல்லது நிலம் வாங்க விரும்பினால், இந்த காலம் அதற்கு சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆக வாய்ப்பு உள்ளது. புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கூடும்.   

6 /13

கன்னி: சனியின் நட்சத்திர பெயர்ச்சி, கன்னி ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களைத் தரும். சட்டத் துறையில் உள்ளவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். இப்போது முதலீடு செய்யலாம். இப்பொது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகமாகும். 

8 /13

விருச்சிகம்: சனி நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். சுப பலன்கள் கிட்டும். இந்த காலத்தில் நீங்கள் மெற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். 

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் சனியின் பெயர்ச்சியால் வேலை மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் சனியின் அருளால் பணம் ஈட்டுவட்து சுலபமாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எளிதாக பணத்தை சேமிக்க முடியும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். மாத வருமானத்தில் ஏற்றம் இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். 

11 /13

கும்பம்: சனி நட்சத்திர பெயர்ச்சி காரணமாக கும்ப ராசியினரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் நடக்கும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக பொருளாதார பிரச்சனைகள் தீரும். தாம்பத்திய வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும். கணவன் மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். 

12 /13

மீனம்: சனி நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எனினும் பணம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பல பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.