இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலத்தை நினைவுபடுத்தும் இங்கிலாந்து ராணியின் இறுதிப்பயணம்

Queen Elizabeth II vs Princess Diana: இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் முதல் மனைவியான வேல்ஸ் இளவரசி டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதியன்று பாரிசில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவர் அந்த விபத்தில் உயிரிழக்கவில்லை என்றால், தற்போது இங்கிலாந்து ராணி என்ற மகுடத்தை சூடியிருப்பார் டயானா என்பதால், இந்த நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.

உலக அளவில் அனைவராலும் நேசிக்கப்பட்ட இளவரசி டயானாவின் பிரபலமும், புகழ்வும் இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர் அனைவரையும் விட அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுவதுண்டு.

டயானாவின் மரணத்தின்போது மக்களின் துக்கம் உச்சத்தில் இருந்தது, அதன்பிறகு இங்கிலாந்து மக்கள் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு அதே அளவு துக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் படிக்க | பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

1 /10

இளவரசியாக மறைந்த டயானா, என்றென்றும் முடி சூடா மகாராணியாக மக்களின் மனதில் இருப்பதாக டயானாவின் மறைவின்போது மக்கள் தெரிவித்தனர்.

2 /10

மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், இளவரசி டயானாவின் இறுதி வழியனுப்பு நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. 

3 /10

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். 

4 /10

ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார் இளவரசி டயானா

5 /10

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இளவரசி டயானா சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் அவருக்கு அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

6 /10

இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்ற சர்ச்சைகளும் எழுந்தன

7 /10

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மீதான விமர்சனங்களை அதிகரித்ததில் முக்கிய பங்கு இளவரசி டயானாவின் மரணத்திற்கு உண்டு

8 /10

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. 

9 /10

விசாரணையின் முடிவில் மரணம் டயானாவின் வாகன ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியதால் ஏற்பட்டதாக கூறப்பட்டது.  

10 /10

பப்பராத்சிகளின் செய்கைகளினால் டயானாவின் மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்புக் கூறப்பட்டது