புதுடெல்லி: எல்லையோர காவல்படையில் பணியாற்ற அரிய வாய்ப்பு. இது நாட்டுக்கு பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான அற்புதமான வாய்ப்பு
BSF ஆட்சேர்ப்பு 2022 நடைமுறையில், எல்லைப் பாதுகாப்புப் படை, பொறியியல் அமைப்பில் உள்ள குரூப்-‘பி’ காம்பாடைஸ்டு பிரிவுகளில் மொத்தம் 90 காலியிடங்கள் நிரப்பப்படும். காலியிட விவரங்கள்: இன்ஸ்பெக்டர் (கட்டிடக்கலைஞர்): 1 சப் இன்ஸ்பெக்டர் (பணிகள்): 57 ஜூனியர் இன்ஜினியர்/சப் இன்ஸ்பெக்டர் (எலக்ட்ரிக்கல்): 32
அனைத்து பணிகளுக்கும் விண்ணப்ப்பவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான ஜூன் 8ம் தேதியன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதியம்: இன்ஸ்பெக்டர் (கட்டிடக்கலைஞர்): 7வது CPC இன் படி மேட்ரிக்ஸ் நிலை-7 (ரூ. 44,900-1,42,400) சப் இன்ஸ்பெக்டர் (பணிகள்): 7வது CPC இன் படி மேட்ரிக்ஸ் நிலை-6 (ரூ. 35,400-1,12,400) ஜூனியர் இன்ஜினியர்/சப் இன்ஸ்பெக்டர் (எலக்ட்ரிக்கல்): 7வது CPC இன் படி மேட்ரிக்ஸ் லெவல்-6 (ரூ 35,400-1,12,400)
விண்ணப்பக் கட்டணம் Rs 200. பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், BSF பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்களுகுக் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், உடல் தகுதித் தேர்வை உள்ளடக்கிய இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்துகொள்வார்கள். இரண்டு நிலைகளையும் முடித்த பிறகு, தேரு செய்யப்பட்டவர்கள் விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தகுதியும் விருப்பும் உள்ளவர்கள் rectt.bsf.gov.in என்ற வலைதளத்தில்June 8, 2022 (23.59 PM)க்கு முன்னதாக விண்ணப்பிக்கவும். BSF Recruitment 2022: Click to check official notification