Calcium Foods: உடல் வலுவுக்கு பலமூட்டும் கால்சியம் நிறைந்த உணவுகள்

Calcium Rich Foods: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

 உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் மூட்டு வலி, பல்வலி போன்ற பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். உடல் வலுவுக்கு பலமூட்டும் கால்சியம் நிறைந்த உணவுகள் இவை...  

1 /5

கொட்டைகளில் பல ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளன, குறிப்பாக பாதாம் புரதம் மற்றும் கால்சியத்தின் வளமான மூலமாகும், இவை இரண்டும் நமது எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளை வலிமையாக்குகின்றன. பாதாம் பால், பாதாம் வெண்ணெய், ஊறவைத்த பாதாம் என பல வழிகளிலும் பாதாமை உட்கொள்ளலாம்.

2 /5

பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஏனெனில் அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, குறிப்பாக கால்சியத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்கு கீரை, ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.

3 /5

பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் நிறைய கால்சியம் உள்ளது, இது எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. பால் தவிர தயிர், மோர், பனீர் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வயது மூப்புக்கு ஏற்ப எலும்புகள் பலவீனமடையாது.

4 /5

சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது எலும்புகளின் வலிமையையும் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.

5 /5

சைவ உணவில், சோயா அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உங்களுக்கு கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும். இதற்கு சோயாபீன், சோயா பால், டோஃபு போன்றவற்றை உட்கொள்ளலாம். அவற்றில் கால்சியத்துடன் வைட்டமின் டி உள்ளது, இது எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. (துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)