சஞ்சு சாம்சன் தலையில் விழுந்த பெரிய பொறுப்பு, சரியாக செய்வாரா?

துலீப் டிராபி போட்டியில் இந்தியா டி அணி வெற்றி பெறுவது சஞ்சு சாம்சன் கையில் இருக்கிறது.

 

துலீப் டிராபி போட்டியில் இந்தியா டி அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

 

1 /8

மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி போட்டி ஆனந்தபூரில் நடைபெற்று வருகிறது, 

2 /8

இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி இரண்டு இன்னிங்ஸ்கள் முடிவில் 488 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை இந்தியா டி அணிக்கு நிர்ணயித்துள்ளது.

3 /8

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா டி அணி, இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

4 /8

இதனால் நெருக்கடிக்கு மத்தியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வரும் இந்தியா டி அணி 190 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.  

5 /8

இன்னும் வெற்றிக்கு 298 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அணியில் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் என்றால் இப்போதைக்கு சஞ்சு சாம்சன் மட்டுமே இருக்கிறார்.  

6 /8

அவர் மட்டும் களத்தில் நிலைத்து நின்று விளையாடிவிட்டால், இந்திய டி அணி வெற்றி பெறுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சாம்சன் அவுட்டானால் இந்திய டி அணியின் தோல்வியை தவிர்க்க முடியாது.

7 /8

மிகப்பெரிய பொறுப்புக்கு மத்தியில் சஞ்சு சாம்சன் ஆடி வருவதால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய டி அணியை வெற்றி பெற வைத்தால் அவர் உடனடியாக இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது. 

8 /8

சாம்சன் எப்படியாவது இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிவிட வேண்டும் என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.