கோடையில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா? இதை தெரிஞ்சிக்காம சாப்பிடாதீங்க

பேரிச்சம்பழம் நன்மைகள்: பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. பேரிச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற பொதுவான சந்தேகம் இருப்பதுண்டு. 

1 /6

குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் சூடான நாட்களில் பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடலுக்கு சில தீங்குகளை ஏற்படுத்தும். கோடை நாட்களில் பேரீச்சம்பழம் சாப்பிடும் முன் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காண்லாம். 

2 /6

கோடை மாதங்களிலும் பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம், இருப்பினும், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். கோடையில் பேரீச்சம்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, அவற்றில் உள்ள அதிக சர்க்கரை. 

3 /6

பேரீச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பான பழம் ஆகும். அவற்றை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகையால் எந்த பருவத்தில் சாப்பிட்டாலும், பேரீச்சம்பழங்களை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

4 /6

கவலைக்குரிய மற்றொரு விஷயம் என்னவென்றால், பேரிச்சம்பழம் உஷ்ணம் நிறைந்தவை. அதாவது, பேரிச்சம்பழம் உடலின் உட்புற வெப்பநிலையை அதிகரிக்கும். ஆகையால் இது வெப்பமான கோடை மாதங்களில் சிக்கலை ஏற்படுத்தும். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிச்சம்பழம் பயனுள்ளதாக இருக்கும்.   

5 /6

உஷ்ணத்தை ஏற்படுத்தினாலும் இவை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. எனவே கோடையில் அவற்றை ஏன் கைவிட வேண்டும்? பேரிச்சம்பழம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகை நோயாளிகளுக்கு சிறந்தது. ஆகையால் இவற்றை குறைந்த அளவில் உட்கொண்டால் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ளலாம். 

6 /6

கோடையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில், பேரீச்சம்பழம் சாப்பிடுவதற்கு முன், அவற்றை தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கவும். ஏனெனில் இது அவற்றின் உஷ்ணத்தை குறைக்க உதவும். கோடை காலத்தில் தினமும் 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும். பேரீச்சம்பழம் சத்தானது என்பதில் சந்தேகமில்லை.