நடிகை த்ரிஷா புத்துணர்வுடன் இருக்கத் தினமும் என்ன செய்கிறார் பாருங்க! இப்படி இருந்தால் 10 வயசு பின்னாடி போகலாம்!

த்ரிஷா பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். த்ரிஷா இன்றும் இளமையாக இருப்பதற்கு  இவர் கடைப்பிடிக்கும் உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்கள் மற்றும் ஓய்வு இவை அனைத்தும் த்ரிஷா எந்தவிதத்தில் செய்து வருகிறார் என்று இங்குப் பார்க்கலாம். 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால் மகிழ்ச்சியாக வாழ ஒரு பைசா செலவு  செய்யாமல் வாழமுடியும் என்று நம்மில் பலருக்கும் தெரியவில்லை. வயது கூடிப்போனாலும் த்ரிஷா தன் அழகை இன்றும் பராமரித்து வருகிறார். இதற்குக் காரணம் அவர் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் மட்டும் தான் இவரை இன்றும் இளமையாகத் தக்கவைத்து வருகிறது. 

1 /8

தென்னிந்தியா நடிகை என்ற பெயருக்குச் சொந்தக்காரியான த்ரிஷா நாளொன்றுக்கு நிம்மதியான தூக்கம் அதில் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் நிச்சயம் கடைப்பிடிப்பார் எனக் கூறுகிறார். 

2 /8

வீட்டுச் சமையல்: த்ரிஷா அதிகமாக வீட்டு உணவுகளைச் சாப்பிட விரும்புவாராம். குறிப்பாக வீட்டுச் சமையல் இவரது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகக் கூறுகிறார்.  

3 /8

நீரேற்றம்: த்ரிஷாவின் பளபளப்பான சருமத்திற்கு முக்கிய காரணம் அவர் தினமும் தண்ணீர் அடிக்கடி குடிப்பதாகவும் இதனால் உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுவதாகக் கூறுகிறார்

4 /8

யோகா: த்ரிஷா யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை அதிகம் விரும்புவாராம். தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.  

5 /8

உணவில் கவனம்: த்ரிஷா காலை, மதியம் மற்றும் இரவு உணவு இவை அனைத்தும் கவனமாக நேரத்துடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும்,இதனால் உடல் புத்துணர்வுடன் இருப்பதாகக் கூறுகிறார்.  

6 /8

மகிழ்ச்சியான வாழ்க்கை: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் சைக்கிள் ஓட்டுதல், நண்பர்களுடன் சுற்றுலா செல்லுதல் போன்ற செயல்பாடுகள் த்ரிஷாவுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறுகிறார்.   

7 /8

த்ரிஷா சமீபத்தில் நடித்த பல படங்கள் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்களுக்கு த்ரிஷாவின் அழகுக் குறிப்புகள் தெரிய அதிகம் ஆர்வம்.  நடிகை, நடிகர்களின் பழக்க வழக்கங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும்.   

8 /8

த்ரிஷாவின் மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அவர் பல்வேறு நேர்காணலில் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து இதில் எழுதப்பட்டது.