சிஎஸ்கேவின் அடுத்த சுரேஷ் ரெய்னா... 19 வயது இளம் வீரரை தூக்க மெகா பிளான் - யார் தெரியுமா?

IPL 2025 Mega Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னா போல் அதிரடியாக விளையாடும் இந்த 19 வயது அதிரடி வீரரை ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. அவர் குறித்து இதில் விரிவாக காணலாம்.

  • Sep 09, 2024, 18:10 PM IST

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் விதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. அவை வெளியாகிவிட்டால் தினந்தினம் கிரிக்கெட் உலகில் அனல் பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

1 /8

வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் (IPL 2025 Mega Auction) மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.  

2 /8

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச் உள்ளிட்ட முன்னணி அணிகள் யார் யாரை தக்கவைக்கும், ஏலத்திற்கு வரப்போகும் முன்னணி வீரர்கள் யார் யார், ரோஹித் சர்மா மும்பை அணியில் தொடர்வாரா, தோனி ஓய்வை அறிவிப்பாரா என பல காரணங்கள் இந்த ஏலத்தின் மீதான சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.   

3 /8

இது ஒரு பக்கம் இருக்க, எக்கச்சக்க இளம் வீரர்களும் இந்த மெகா ஏலத்திற்குள் வருவார்கள். இந்திய வீரர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பல லீக்குகளில் கலக்கிய வெளிநாட்டு இளம் வீரர்கள் கூட அடுத்த ஐபிஎல் சீசனில் (IPL 2025) விளையாட வருவார்கள்.  

4 /8

அப்படியிருக்க ஒவ்வொரு அணியும் பல இளம் வீரர்களை சரியான தொகையில் தூக்க திட்டமிட்டு வருவார்கள். மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி இதில்தான் கில்லாடி எனலாம். திறமையான இளம் வீரர்களை தூக்குவதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிகர் யாரும் இல்லை.   

5 /8

அந்த வகையில், இந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படும் இளம் வீரர் முஷீர் கான் (Musheer Khan). முஷீர் கானை மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மட்டும் சிஎஸ்கேவும் (CSK) தூக்க வெறித்தனமாக காத்திருக்கின்றன.  

6 /8

19 வயதான இவர் இந்தாண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் உள்பட 360 ரன்களை குவித்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முஷீர் கான் 2ஆம் இடத்தை பிடித்திருந்தார்.  

7 /8

இது ஒருபுறம் இருக்க ரஞ்சி டிராபியில் இரட்டை சதம், தற்போது நடைபெறும் துலிப் டிராபி தொடரில் 181 ரன்கள் என ரன்களை குவித்து வருகிறார். ஓடிஐ, டெஸ்ட் மட்டுமின்றி டி20 போட்டியிலும் இவரது பேட்டிங் பாணி கைக்கொடுக்கும்.    

8 /8

எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு சுரேஷ் ரெய்னா (Suresh Raina) விளையாடிய நம்பர் 3 ஸ்பாட்டில் நீண்ட நாளாக நிலையான வீரர் கிடைக்கவே இல்லை. இந்நிலையில், முஷீர் கானை நல்ல விலைக்கு எடுத்து நம்பர் 3இல் ஒரு நிலையான இந்திய வீரரை வைத்துக்கொள்ள சிஎஸ்கே நிச்சயம் திட்டமிடும்.