செரிமானத்தை மேம்படுத்தும் சோம்பு! மலச்சிக்கலுக்கு குட் பை சொல்லும் பெருஞ்சீரகம்

Fennel Panacea For Health: தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனை மக்களிடையே அதிகரித்துவிட்டது. மலச்சிக்கல் பிரச்சனையை போக்க நாம் பயன்படுத்தும் மருந்துகள், நீண்ட கால அடிப்படையில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே மலச்சிக்கலைப் போக்க வீட்டு வைத்தியங்கள் கை மேல் பலன் கொடுக்கும்  

செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் சோம்பு, நார்ச்சத்து கொண்டது. இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி வயிறு சுத்தமாகும். தவிர, வாயு, அஜீரணம், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளும் சீராகும்

1 /8

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், பல வழிகளில் பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மலச்சிக்கலை போக்க பெருஞ்சீரகத்தை எந்தெந்த வழிகளில் உட்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்

2 /8

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சோம்பில்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சத்துக்கள் உள்ளன. சோம்பு விதைகளில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன

3 /8

வயிற்றில் வாயு உருவாவது, வயிற்று வலி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும் பல கூறுகள் சோம்பில் காணப்படுகின்றன, இது வயிற்று தசைகளை சீராக்குகிறது

4 /8

 மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்க சோம்பு கசாயம் உதவியாக இருக்கும். வாயு, வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளிலும் இது நன்மை பயக்கும். இந்த தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் வடிகட்டி அதனுடன் சிறிது தேன் சேர்த்து பருகவும். இந்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம்.

5 /8

வாய் துர்நாற்றத்தில் இருந்து நிவாரணம் கொடுக்கும் சோம்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்டும். அதுவும் உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகம் உட்கொள்வது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்

6 /8

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட சோம்பை பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். சோம்பை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு ஸ்பூன் இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் சாப்பிடவும். இது செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் காலையில் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்  

7 /8

மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பெருஞ்சீரகம் பாலையும் உட்கொள்ளலாம். இதற்கு ஒரு கிளாஸ் சூடான பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் பெருஞ்சீரகம் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அதை வெதுவெதுப்பாக குடிக்கவும். இரவு தூங்கும் முன் இந்த பாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்ல