’குக் வித் கோமாளி’ சிவாங்கியின் தெருக்கூத்து அவதாரம்

குக் வித் கோமாளியில் கலக்கும் சிவாங்கி, அடுத்த எபிசோடில் போட இருக்கும் கெட்டப்பை வெளியிட்டுள்ளார். 

பாடகராக அறிமுகமாகி என்டர்டெயினராக மாறியிருக்கும் சிவாங்கி, தெருக்கூத்து கலைஞர் அவதாரத்தில் எடுத்திருக்கும் புகைப்படம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 /6

சூப்பர் சிங்கரில் பாடகராக அறிமுகமானவர் தான் சிவாங்கி. ஆனால், சூப்பர் சிங்கர் செட்டில் அவர் செய்த சேட்டைகள், காமெடி கலாட்டாக்கள் அடுத்தடுத்த வாய்ப்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

2 /6

அதாவது, பாடகராக இருந்து என்டர்டெயினர் அவதாரத்தை எடுக்க வைத்தது. பாடும்போது ஒரு குரலும், பேசும்போது ஒரு குரலும் என அவரின் மாடுலேஷனுக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

3 /6

கியூட்டாக பேசுவதோடு, டைமிங் எக்ஸ்பிரசனிலும் பின்னியெடுத்ததால் விஜய் டிவியில் ஆஸ்தான காமெடியனாக மாறினார் சிவாங்கி.

4 /6

குக் வித் கோமாளியில் இருக்கும் கோமாளிகளிலேயே அதிக ரசிகர் கூட்டம் கொண்ட கோமாளியாக இருக்கிறார்.

5 /6

வாரம் ஒரு கெட்டப் போட்டு வரும் சிவாங்கி, இந்த வாரம் தெருக்கூத்து கலைஞர் அவதாரத்தில் வர இருக்கிறாராம்.

6 /6

இந்த கெட்டப்பில் இருக்கும்போது புகைப்படம் எடுக்காமல் விடுவாரா என்ன?. அழகான சில புகைப்படங்களை எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.