Healthy Heart Tips: சமையலுக்கு உப்புக்குப் பிறகு அடுத்த அத்தியாவசியமான இடத்தை பிடிப்பது எண்ணெய். எண்ணெயின் தரமும் உணவுக்கு சுவையூட்டுகிறது. அதையும் விட முக்கியமாக உடலுக்கு தேவையான பல சத்துகளும் சமையல் எண்ணெயில் இருந்து கிடைக்கிறது.
மேலும் படிக்க | எவ்வளவு சாப்பிட்டாலும் எடை அதிகமாகாது! எஞ்சாய்
உணவு சமைத்த பிறகு, சமையல் எண்ணெய் காரணமாக, உணவும் அதன் சுவையைப் பெறுகிறது. எனவே வெறும் சுவைக்காகவே சமையலுக்கு எண்ணெய் வாங்கும் பழக்கமும் இருக்கிறது. உண்மையில், உடல் நலத்தைக் காக்கும் சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதேனும் நோய் இருந்தால், அதை மனதில் வைத்து, எந்த சமையல் எண்ணெயையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு பயனுள்ள சில சமையல் எண்ணெய்கள் இவை...
ஆலிவ் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு ஒரு நன்மை பயக்கும் எண்ணெயாக கருதப்படுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் பாலிபினால்கள் எனப்படும் தனிமங்கள் இதில் உள்ளன. ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைவாக வைத்திருக்கும் என்பதால், இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்க உதவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
வேர்க்கடலை எனப்படும் நிலக்கடலையில் இருந்து எடுக்கும் கடலை எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. நிலக்கடலை எண்ணெயை உட்கொள்வதால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.
கடுகு எண்ணெய், இதயம் மற்றும் முழு உடலுக்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. கடுகு எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதால், சருமம் மிருதுவாகும். மூட்டு வலி குறைவதோடு, உடலின் மற்ற உறுப்புகளும் வலுவடையும். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் தவிர, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் கடுகு எண்ணெயில் காணப்படுகின்றன. கடுகு எண்ணெயை சாப்பிடுவது செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது.
சூரியகாந்தி விதைகளிலிருந்து பெறப்படும் சூரியகாந்தி எண்ணெய் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மற்ற எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெயில் அதிக வைட்டமின் ஈ உள்ளது, இது இதயத்திற்கு ஆரோக்கியமானது.