CWC 5: குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! அட ‘இந்த’ சீரியலின் வில்லி நடிகையா..

CWC 5 New Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் தற்போது புதிதாக ஒரு கோமாளி பங்கு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

CWC 5 New Comali : ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. காமெடியையும் சமையலையும் கலந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன், தற்போது புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில், குக்குள் மட்டுமல்ல, கோமாளிகளும் புதிதாக களமிறங்கியுள்ளனர். செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்க, இதுவரை கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனை ரக்‌ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், குக் வித் கோமாளியில் புதிய கோமாளி ஒருத்தர் களமிறங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. 

1 /7

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில், பழைய கோமாளிகளான புகழ், குரேஷி, சுனிதா உள்ளிட்டோர் உள்ளனர். 

2 /7

புதிதாக மட்டுமன்றி புதிதாக செல்லம்மா சீரியல் கதாநாயகி அங்க்‌ஷித்தா, ஷப்னம் உள்ளிட்ட இன்னும் சிலர் புதிய கோமாளிகளாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர். 

3 /7

நிகழ்ச்சியின் புதிய நடுவராக, மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று வருகின்றார். தற்போது இன்னொரு வில்லி நடிகை ஒருவர் புதிய கோமாளியாக பங்குபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் யார் தெரியுமா?

4 /7

அந்த நடிகை வேறு யாரும் இல்லை, நம்ம வென்பாதான். தமிழ் தொடர்களும் மிக பிரபலமாக இருந்த தொடர், கண்ணம்மா. இதில், பயங்கர வில்லியாக நடித்திருந்தவர் ஃபரினா அசாத். 

5 /7

சில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கும் இவர், தற்போது அந்த நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டார். 

6 /7

ஃபரினா, குக் வித் கோமாளியில் புதிய கோமாளியாக களமிறங்க உள்ளதை பலர் மீம்ஸ் ஆக போட்டனர். இதை ஃபரீனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பகிர்ந்திருக்கிறார். 

7 /7

இவரை, அடுத்த வார அல்லது இந்த வார எபிசோடில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.