பாம்பு பண்ணை வைத்தால் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்! விஷப்பாம்புகள் விற்பனை படு ஜோர்!

Snake Farming Gives Excellent Profit : உழைத்து உண்டால் உண்ணும் உணவு செரிக்கும், மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படபடத்து பயத்தில் உயிர் போய்விடும் என்பதை குறிக்கும் பல பழமொழிகளும் வழக்கில் உள்ளன

  • Jun 28, 2024, 14:24 PM IST

ஆனால், பாம்புகளை வளர்ப்பதையே தொழிலாக வைத்து நன்றாக சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாம்புப் பண்ணை வைத்து பணம் பார்க்கும் மக்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

1 /9

வேளாண்மை என்ற சொல்லில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முதல் பல தொழில்கள் அடங்கிவிடும். ஆனால், பாம்பு வளர்ப்பும் வேளாண்மை என்ற வரையறைக்குள் வரும் என்பது தெரியுமா?

2 /9

விலங்குகள், பறவைகள், காளான், மண்புழு என பல உயிரினங்களை தொழில்முறையில் வளர்ப்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், பாம்பு வளர்த்து லாபம் சம்பாதிக்கும் தொழில் உலகில் ஒருசில நாடுகளில் செய்யப்படுகிறது

3 /9

சீனாவின் ஜிசிகியாவோ என்ற கிராமத்தில் மக்கள் பெரிய அளவில் பாம்புகளின் பல வகைகளை வளர்த்து நல்ல லாபம் ஈட்டுகின்றனர்  

4 /9

ஜிசிகியாவோ கிராமத்தில் ஆண்டுதோறும் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன

5 /9

ஜிசிகியாவோ கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் பாம்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளன. பாம்புகள், நாட்டிலுள்ள விலங்கு உணவு சந்தையில் விற்கப்படுகின்றன. மக்கள், பாம்புகளை வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள்.

6 /9

பாரம்பரிய மருத்துவ முறைகள் சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. பாம்பு விஷத்தைக் கொண்டு பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக விஷப்பாம்புகளை விலைக்கு வாங்கி, அவற்றின் விஷம் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த விஷத்தில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.  

7 /9

சீனாவில் பாம்புகளை உற்பத்தி செய்ய சிறப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பாம்புகள் முட்டையிடும் போது, ​​மற்ற பாம்புகள் அவற்றை உண்ணாதபடி, மரம் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட சிறிய பெட்டிகளில் அடைத்து வைக்கப்படுகின்றன 

8 /9

தனியாக வைக்கப்படும் பாம்புகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், அவை வெவ்வேறு அடைப்புகளில் இனம் வாரியாக வைத்து பராமரிக்கப்படுகின்றன

9 /9

பாம்பின் விஷம், இறைச்சி மற்றும் பற்களின் பொருட்கள் அண்டை நாடான ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவில் பாம்பு பண்ணைத் தொழில், அந்நியச் செலாவணியைப் பெற்று தரும் நல்ல தொழிலாகவும் மாறியிருக்கிறது