இஞ்சியை அளவோடு சாப்பிடுங்க... இல்லை என்றால் பிரச்சனை தான்..!!

இஞ்சி என்னும் மசாலா ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. து பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம்.

 

இஞ்சி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்றாலும், அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1 /9

இஞ்சி ஒரு மசாலா பொருள் என்பதை விட காலம் காலமாக ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவதால், இதனை மூலிகை எனலாம். இஞ்சியில் நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.

2 /9

ஆரோக்கிய நன்மைகள்: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல்ஸ் என்று அழைக்கப்படும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தினசரி உணவில் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

3 /9

இஞ்சி பக்க விளைவுகள்: எனினும், இஞ்சி உடலுக்கு சூட்டை கொடுக்க கூடியது.  இதன் காரணமாக இதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். மித மிஞ்சிய அளவில் இஞ்சியை சாப்பிடுவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

4 /9

நீரிழப்பு: உடல் சூட்டை அதிகரித்து அதிக வியர்வையை உண்டாக்கும் இஞ்சிக்கு சூட்டை கொடுக்கும் தன்மை உண்டு. இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையும் காணப்படும்.  

5 /9

செரிமான பிரச்சனைகள்: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். வெப்பமான காலநிலையில் இஞ்சியை அதிகமாக உட்கொள்வதும் குடல் காயங்களை ஏற்படுத்தும்.

6 /9

ஒவ்வாமை: தினமும் இஞ்சி சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி பிரச்சனைகளும் காணப்படுகின்றன. இதன் காரணமாக தொண்டையின் உட்புறத்தில் தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம்.

7 /9

வெப்ப பக்கவாதம் : இஞ்சியானது சூடான தன்மை கொண்டது மற்றும் கோடையில் வெயிலில் வெளியில் செல்லும் போது அதிகமாக உட்கொள்வது வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடல் வெப்பநிலை அதிகமாக உயரும் போது ஏற்படும் ஒரு தீவிர நிலை.

8 /9

குறைந்த இரத்த அழுத்தம்: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதனால் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படலாம். குறைந்த ரத்த அழுத்த நோயாளிகள் வெயில் காலங்களில் அளவிற்கு அதிக இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

9 /9

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.