இன்னும் 35 நாட்களில் கும்பத்தில் சனி உதயம், இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்

Shani Uday 2023: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அஸ்தமனமாகிறது, உதயமாகிறது. சனி பகவான் இன்று, அதாவது ஜனவரி 30 அன்று அஸ்தமனமாகியுள்ளார். தற்போது சனி பகவான் மார்ச் 9 ஆம் தேதி உதயமாவார். அவரது உதயத்தால் பல ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

1 /4

சனி எந்த ராசியில் உதயமாவார்: சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசியில் பெயர்ச்சியானார். பிறகு ஜனவரி 30 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமாகியுள்ளார். இப்போது வருகிற மார்ச் 9 ஆம் தேதி கும்பத்தில் உதயமாகி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார். சனியின் உதயத்தால் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகும்.  

2 /4

ரிஷப ராசி: பண ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கும்.  

3 /4

சிம்ம ராசி: சனியின் உதயத்தால் நல்ல காலம் தொடங்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  

4 /4

கும்ப ராசி: சனியின் உதயம் சாதகமான பலன்களைத் தரும். பணியிடத்தில் பாராட்டுகள் உண்டாகும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

You May Like

Sponsored by Taboola