உங்கள் குழந்தைக்கு இந்த பழக்கத்தை மறக்காமல் சொல்லி கொடுங்கள்!

நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களில் உள்ள மாறுபாட்டை குழந்தைகளுக்கு தவறாமல் சொல்லி கொடுக்க வேண்டும். இவற்றை குழந்தைகள் புரிந்து கொள்வதில்லை என்றால் பின்னாளில் தவறு செய்ய வாய்ப்புள்ளது.

 

1 /7

எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நல்லவராக தான் வளர்க்க முயற்சி செய்கின்றனர். மற்றவர்கள் அவர்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கு சிறு வயதில் இருந்தே சிலவற்றை சொல்லி கொடுக்க வேண்டும்.   

2 /7

யாராவது பேசி கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு இடையில் சென்று பேசுவது தவறு என்று சொல்லி கொடுங்கள். அப்படி அவசரமாக பேச வேண்டும் என்றால் அனுமதி கேட்டு பேச சொல்லுங்கள்.  

3 /7

மற்றவர்களின் பொருட்களை அனுமதியின்றி எடுப்பது அல்லது பயன்படுத்துவது தவறு என்று சிறு வயதிலேயே புரிய வைப்பது நல்லது. இது பின்னாளில் பல விஷயங்களில் அவர்களுக்கு உதவும்.   

4 /7

ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் மீண்டும் வைக்க சொல்லி கொடுங்கள். பொம்மை, புத்தகங்கள், சாப்பிட தட்டு என அனைத்திலும் ஒழுக்கத்தை கொண்டு வாருங்கள்.  

5 /7

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை கவனிப்பதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லி கொடுங்கள். உணவுகள், பொம்மைகள் போன்றவற்றைத் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கற்று கொடுங்கள்.  

6 /7

குழந்தைகளுக்கு பொறுமையை கற்று கொடுக்க சிறந்த வழி பெற்றோர்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். ஷாப்பிங் செய்யும்போது, உணவு கவுண்டரில் வரிசையில் நின்று புரிய வையுங்கள்.  

7 /7

அனைவரிடமும் மரியாதையுடன் பேச சொல்லி கொடுங்கள். சிறு வயதிலேயே இதனை கற்று கொடுக்க வேண்டியது அவசியம்.