தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. எனவே தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பை பற்றி பார்ப்போம்.
ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் எடை 529 கிராம் ஆகும். ஆனால் அதில் 6 கிராம்கள் மட்டுமே தங்கம் உள்ளது. அதாவது அதன் மொத்த எடையில் 1.3% மட்டுமே தங்கம் உள்ளது.
உண்மையில் ஒலிம்பிக்கில் தரப்படும் தங்க பதக்கங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. அவற்றில் சேர்க்கப்படும் பெரும்பாலான உலோகங்கள் வெள்ளி தான்.
இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் இல்லை. பல ஆண்டுகளாக நடத்தப்படும் சர்வதேச ஒலிம்பிக்கிலும் இப்படி தான் இருக்கும். தங்க பதகத்தில் குறைந்தபட்சம் 92.5% வெள்ளி இருக்கிறது.
தங்க பதக்கங்களில் தங்க முலாம் பூசப்படுகின்றன. 1912ல் ஸ்டாக்ஹோம் கேம்ஸ் வரை தங்க பதக்கங்கள் முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டன.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்க பதக்கத்தை மட்டுமே விரும்புகின்றனர். அதில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை ஆராய்வதில்லை.
தற்போது ஒருசில பெரிய தொடர்களில் தங்க பதக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு கூடுதலாக செக்கும் வழங்கப்படுகிறது.