IPL History: ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்த டாப் 8 பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
17ஆவது ஐபிஎல் சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த புள்ளிவிவரம் அனைத்து சீசன்களையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
8. 2012ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் புனே வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சர்மா 31 ரன்களை கொடுத்தார்.
7. 2023ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அர்ஜூன் டெண்டுல்கர் 31 ரன்களை கொடுத்தார்.
6. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்க்கியா 32 ரன்களை கொடுத்தார்.
5. 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் போபாரா 33 ரன்களை கொடுத்தார்.
4. 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர் பர்விந்தர் அவானா 33 ரன்களை கொடுத்தார்.
3. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் டேனியல் சாம்ஸ் 35 ரன்களை கொடுத்தார்.
2. 2011ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியன் பிரஷாந்த் பரமேஸ்வரன் ஒரு ஓவரில் 37 ரன்களை கொடுத்தார்.
1. 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல் 37 ரன்களை கொடுத்தார்.