Dream Travel: சுற்றுலாக் காதலர் Yati Gaur! 40 நாட்களில் 520 கிமீ நடைபயணம்

'யதி கவுர்' 520 கிமீ தூரத்தை நடந்தே கடந்தவர், நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்.

24 வயதான யதி கவுர் பயணம் செய்வதை விரும்புகிறார். கடந்த செப்டம்பரில் அவர் ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத், துங்கநாத் மற்றும் பிற இடங்கள் வழியாக பத்ரிநாத் வரை 520 கி.மீ தொலைவை 40 நாட்களில் நடந்து கடந்துள்ளார்.   

1 /6

பயணம் செய்வது தனக்கு ஒரு சிகிச்சை போன்றது என்று யதி கவுர் கூறுகிறார். இப்போது அவர் ஜூலை 1 முதல் ஜூலை 16 வரை ஹிமாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்தார், அதில் அவர் 1325 கிலோமீட்டர் தூரம் தனது பயணத்தை நடந்தார்.

2 /6

ஜனவரியில், ராஜஸ்தானில் சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தை கடந்தார். அவர் ஜெய்ப்பூரில் இருந்து நடந்து அஜ்மீர், புஷ்கர், மவுண்ட் அபு, ஜெய்சால்மர், பார்மர் மற்றும் பில்வாரா போன்ற இடங்களை நடந்து கடந்தார்.

3 /6

எட்டி கவுர் தனது நாட்டை அறிய விரும்புவதாக கூறுகிறார். அவர் மக்களைச் சந்திப்பது, நண்பர்களை உருவாக்குவது, அவர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை விரும்புகிறார்.

4 /6

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் யதி கவுர் 'நான் அவசரமாக எங்கும் செல்வதில்லை. இன்றிரவு நான் எங்கே தூங்குவேன் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என் பயணம் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசையாக இருக்கிறது.   நடக்கும்போது நான் நிம்மதியாக உணர்கிறேன். என் மனதில் இருந்து எண்ணங்களை வெளியேற்ற முடிகிறது. என்னால் ஒரே இடத்தில் உட்கார முடியாது.

5 /6

சூரிய உதயமானதும் நடக்கத் தொடங்கும் யதி, தினமும் சராசரியாக 20 கி.மீ. நடக்கிறார். 18 கிலோ எடையுள்ள சில அத்தியாவசிய பொருட்களை தன்னுடன் வைத்திருப்பார், அதில் அவர் சில துணிகள், ஒரு கேமரா, ஒரு தூங்கும் பை மற்றும் கூடாரங்கள், தண்ணீர், வெல்லம் போன்றவற்றை வைத்திருப்பார்.

6 /6

மைனஸ் 12 டிகிரி செல்சியஸில் உயிர்வாழ தனது ஸ்லீப்பிங் பேக் உதவும் என்றும், இந்த பையே தனக்கு உற்ற தோழன், உயிர்காக்கும் தோழன் என்று சொல்கிறார் யதி கவும்.