மாம்பழ ஜூஸில் மலை போல் இருக்கும் நன்மைகள்... சம்மரில் கண்டிப்பா குடிக்கணும்!

Health Benefits Of Mango Juice: கோடை காலத்தில் மட்டுமே மாம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதேபோல், அதனை ஜூஸாக நீங்கள் வீட்டில் தயார் செய்து அவ்வப்போது குடிப்பது பல விஷயங்களில் நன்மையை தரும். அவற்றில் சிறந்த ஆறு நன்மைகளை இங்கு காணலாம்.

மாம்பழத்தை ஜூஸாக (Mango Juice) போட்டுக்குடிக்கும் போது அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை போடாமல், அதன் இயல்பான சுவையிலேயே குடிக்கவும். அதுவே உங்களுக்கு கூடுதல் நன்மையை தரும். 

 

 

1 /7

மாம்பழ ஜூஸ்களை குடிப்பதன் மூலம் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல நன்மைகள் கிடைக்கும். இதில் இருக்கும் வைட்டமிண் C மற்றும் ஓ, போட்டாஸியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் தாய் மற்றும் சேய் இருவருக்கும் நன்மையை தரும்.   

2 /7

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை அதிகமாக காணப்படுகிறது. இது உணவில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பாகும். எனவே, மாம்பழ ஜூஸை குடித்தால் இரும்புச் சத்து மட்டுமின்றி பிரதம் மற்றும் ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவின் மேம்படும்.   

3 /7

கோடை காலத்தில் அதிக வெயில் இருக்கும் காரணத்தால் பலரின் உடலில் நீர்சத்து குறைந்து உடல்நிலை பாதிப்படைவார்கள். மாம்பழ ஜூஸ் அவர்களுக்கு உடனடி நீரேற்றத்தை அளிக்கும். இதன்மூலம், உடல் வெப்பமடைவதையும் தடுக்கும். 

4 /7

மாம்பழத்தில் போட்டாஸியம், மேக்னீஸியம் ஆகிய இரண்டும் உள்ளதால் இது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். தினமும் மாம்பழ ஜூஸை குடிப்பதன் மூலம் கோடையில் ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கப்படும். இதில் உள்ள வைட்டமிண்கள் கெட்ட கொழுப்பை உடலில் தங்கவிடாது.   

5 /7

நினைவாற்றலை அதிகரிக்க நினைப்போர் மாம்பழ ஜூஸை அடிக்கடி குடிக்கலாம். இதில் குளுட்டமைன் அமிலம் மூளை செல்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால், கவனமும், நினைவாற்றலும் அதிகரிக்கும்.   

6 /7

மாம்பழத்தில் வைட்டமிண் A அதிகம் உள்ளதால் இது கண்பார்வையை சீராக்க நினைப்போருக்கு உதவும். ஒரு கிளாஸ் மாம்பழ ஜூஸை குடித்தால் உங்கள் உடலுக்கு ஒருநாளைக்கு தேவைப்படும் வைட்டமிண் A-வில் 25 சதவீதத்தை அதிலேயே பெற்றுவிடுவீர்கள்.   

7 /7

பொறுப்பு துறப்பு: மாம்பழ ஜூஸை குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்த இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. இருப்பினும், இது பொது தகவல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட செய்தி என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இதனை நீங்கள் கடைபிடிக்கும் முன் உங்களின் மருத்துவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வது அவசியம். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.