CAA In India: இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டமாவதற்கு முன் கடந்துவந்த பாதை கரடுமுரடானது. 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்திருந்தாலும் பலத்த எதிர்ப்பும் கொஞ்சம் ஆதரவும் கொண்ட கடினமான பாதையில் பயணித்து தான், சட்டமாகி இருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம்...
இந்த சட்டத்தின் கீழ், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உட்பட இஸ்லாமியர் அல்லாத குடியேறியவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும். குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.
CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? என்பதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்வோம். தெற்காசியாவின் சில பகுதிகளிலிருந்து மத சிறுபான்மையினரின் குடியுரிமையை இது எவ்வாறு துரிதப்படுத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமையைப் பெற தகுதி பெறுவார்கள். டிசம்பர் 31, 2014 க்கு முன், இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு இந்த சட்டம் இந்திய குடியுரிமையைக் கொடுக்கும்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று (மார்ச் 11, 2024) அறிவித்தது. இந்தியாவில் பொதுத் தேர்தல் அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
1955 இன் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி, குடியுரிமை திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்த மசோதா இன்று சட்டமாக மாறியது. இந்த சட்ட மசோதாவுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன
சிஏஏ, வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான கால அவகாசத்தை ஆறு ஆண்டுகள் குறைத்துள்ளது. 2014 க்கு முன் இந்தியாவில் வந்தவர்கள், இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவர்கள். புலம்பெயர்ந்தோரின் குடியுரிமைக்கான வசிப்பிடத் தேவையை பதினொரு ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக தளர்த்தப்படுகிறது.
பெரும்பாலும் நாட்டின் எல்லை மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது
குடியுரிமை திருத்தச் சட்டத்தில், பட்டியலிடப்பட்டுள்ள மத சிறுபான்மையினர்கள்: இந்து, சீக்கியர், பௌத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த நபர்கள் "மத துன்புறுத்தல் அல்லது மத துன்புறுத்தல் பயம்" காரணமாக அண்டை முஸ்லீம்-பெரும்பான்மை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்