கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!

புதன் பெயர்ச்சி பலன்கள்:  மே 29, 2024 அன்று புதன் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகிறார். நெருப்புடன் தொடர்புடைய இந்த நட்சத்திரக் கூட்டத்தின் அதிபதி சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது. புதனின் இந்த நட்சத்திர மாற்றம் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

புதன் பெயர்ச்சியினால், வருமானம், தொழில், வேலை, வணிகம் எல்லா வகையிலும் பல பெறப் போகும் 7 ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /9

புதன் பெயர்ச்சி பலன்கள்:  வணிகம், ஞானம், பேச்சு, காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் அதிபதியான புதன், மே 29, 2024 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். புதனின் ராசி மாற்றம் 7 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தப் போகிறது.

2 /9

மேஷம்: கிருத்திகை நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் அறிவுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. மூத்தவர்கள் ஆலோசனைகளுடன் சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

3 /9

மிதுனம்: கிருத்திகை நட்சத்திரத்தில் புதன் சஞ்சரிப்பதால், மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி இரண்டும் பெருகும். படைப்பாற்றல் மற்றும் கலைத் திறமையைப் பயன்படுத்தி தொழில் மற்றும் வேலையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். குடும்ப வாழ்வில் சுபிட்சம் நிலவும்.

4 /9

சிம்மம்: புதனின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பேச்சின் மூலம், மற்றவர்களிடம் செல்வாக்கு செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். படிப்பு மற்றும் கற்பித்தலில் தொடர்புடையவர்கள் இதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு.

5 /9

துலாம்: கிருத்திகை நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரம் செய்வது துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வேலையில் புதிய உயரத்திற்கு செல்வீர்கள். வியாபாரத்தில் சாதகமான ஒப்பந்தங்கள் ஏற்படும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் மனம் மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.

6 /9

தனுசு: புதன் ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த வகையில் வேலை மாற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், இணக்கம் அதிகரிக்கும். நீங்கள் பணிபுரியும் துறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. கணிசமான நிதி ஆதாயமும் இருக்கும்.

7 /9

கும்பம்: புதன் பெயர்ச்சியினால், மாணவர்கள் படைப்பாற்றல் மற்றும் கற்பனையை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், வெற்றியை பெறலாம். நிதி நிலைமையை மேம்படும் வகையில் புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உங்கள் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

8 /9

மீனம்: புதன் பெயர்ச்சியினால், நிதி நிலைமை மேம்படும். பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்கள் மற்றும் வணிக வாய்ப்புகள் மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில்  மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. இவை அனுகூலமாக இருக்கும். தொழில் தொடர்பான வாய்ப்புகளை கண்டறிந்து முன்னேறுவதில் வெற்றி பெறுவீர்கள்.

9 /9

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.