சூரியனின் அருளால் வைகாசியில் பண மழையில் நனையும் ‘சில’ ராசிகள்!

சூரியன் சக்தி, ஆற்றல் மற்றும் ஆன்மாவைக் குறிக்கும் ஒரு கிரகம்.  பிரபஞ்சத்தின் தந்தையாக சூரிய பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து சுமார் ஒரு வருடத்தில் அனைத்து ராசிகளிலும் குடியேறி தனது சுழற்சியை நிறைவு செய்கிறார்.

சூரிய பகவான் வரும் மே 15ஆம் தேதி, அவர் தனது உற்ற கிரகமான செவ்வாயின் ராசியான மேஷத்தில்  இருந்து விலகி, சுக்கிரனுக்கு சொந்தமான ரிஷப ராசிக்கு மாற உள்ளார். வைகாசி மாதம் முழுவது அவர் இந்த ராசியில் இருப்பார். அவரது சஞ்சாரத்தால், 5 ராசிக்காரர்கள் வெற்றிகளை குவிப்பார்கள். அவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அவர்களின் அதிர்ஷ்டம் ஒரு மாதத்திற்கு சூரியனைப் போல பிரகாசிக்கும். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /7

பிரபஞ்சத்தின் தந்தையாக விளங்கும் சூரிய பகவான்  மே 15ம் தேதி காலை 11.58 மணிக்கு சூரியன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பிரவேசித்து ஜூன் 15ம் தேதி மாலை 6.25 வரை இந்த ராசியில் இருக்கிறார். வைகாசி மாதம் முழுவதும் சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் சூழ்நிலைகளில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.  

2 /7

கடக ராசியின் பதினொன்றாவது வீட்டில் சூரியன் நுழைய உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களும் விரைவில் நிறைவேறும். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட வேலைகளும் இந்த காலக்கட்டத்தில் முடிவடையும். பழைய நண்பர்களை சந்திக்கலாம்.  புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை காண முடியும்.

3 /7

சிம்ம ராசியின் 10ம் வீட்டில் சூரியன் நுழைய உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். இவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். அதே நேரத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களும் இந்த காலகட்டத்தில் வெற்றியைப் பெறுவார்கள். பணியில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

4 /7

கன்னி ராசியின் ஒன்பதாம் வீட்டில் சூரியன் நுழைய உள்ளார். இத்தகைய சூழ்நிலைகளில், இந்த ராசியின் சொந்தக்காரர்கள் ஆன்மீகம் தொடர்பான செயல்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, உங்களின் உழைப்பும் பணியில் பாராட்டப்படும். புதிய வேலை தேடுபவர்களும் வெற்றி பெறுவார்கள். சூரியபகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.  

5 /7

தனுசு ராசியின் ஆறாவது வீட்டில் சூரியன் நுழைகிறார். அதனால், உங்கள் எதிரிகள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்களது சதி பலிக்காது. அவர்கள் தோல்வியை தழுவி, மண்ணைக் கவ்வும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நீண்ட நாளாக கைக்கு வராமல் சிக்கி இருந்த பணத்தை இந்த காலகட்டத்தில் மீட்டெடுக்க முடியும். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

6 /7

மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரியன் நுழைய உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நபரின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இதனுடன் ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கை மற்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை.  ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.