Health Tips In Tamil: ரத்த நாளங்களில் அதிக கொலஸ்ட்ரால் தேங்கினால் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில், இந்த 5 பழங்கள் ரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்க உதவும்.
இந்த 5 பழங்களையும் தினமும் சால்ட் போன்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பழங்களை உட்கொள்வதன் முன்னர் உங்களின் மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்துகொள்ள மறக்காதீர்கள். இந்த பழங்கள் உங்களின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா, இல்லையா என்பது உறுதிசெய்துகொள்ளுங்கள்.
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அதிகம் தேங்கினால் அடைப்பு ஏற்படும். அந்த வகையில், சில பழங்களை தினமும் சாப்பிட்டால் அந்த கொலஸ்ட்ரால் கரைந்துவிடும்.
இதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அந்த வகையில், இந்த 5 பழங்களை சாலட்டாக தினமும் சாப்பிடுங்கள். அதன்மூலம், உங்களுக்கு சில நாள்களிலேயே வித்தியாசம் தெரியும்.
அவகாடோ (Avocado): இதில் beta-sitosterol அதிகம் இருக்கிறது. கூடவே, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
பாதாமி பழம் (Apricot): இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள கற்களையும் நீக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாஸியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும், இது இதயத்திற்கும் நல்லது.
பேரீச்சம்பழம் (Dates): இதில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மேலும் இது ஹீமாகிளோபின் அளவை அதிகரிக்க உதவும். கொழுப்பை குறைக்கவும் உதவும்.
ஆப்பிள் (Apple): இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. மேலும், polyphenols எனப்படும் நுண்ணுயிர்களும் அதிகம் இருக்கும். இது கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவும். இதயத்தில் உள்ள அடைப்புகளையும், மூளைக்குள் உள்ள அடைப்புகளையும் சீராக்கும்.
மாதுளை (Pomegranate): இதனை நீங்கள் விதைகளுடன் சாப்பிட வேண்டும். இது ரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலை எடுக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.