மூட்டு வலி பாடாய் படுத்துகிறதா... ‘இந்த’ எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்யவும்!

குளிர்காலத்தில் பலருக்கு மூட்டு வலி பாடாய் படுத்தும். இந்த வலிக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க கூடுதல் கவனம் தேவை. மூட்டு வலியிலிருந்து விடுபட வேண்டுமானால், இன்றிலிருந்தே இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 எண்ணெய்களில் ஒன்றைக் கொண்டு மசாஜ் செய்வது வியக்கத் தக்க பலன்களை கொடுக்கும்.

 

1 /5

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கடுகு எண்ணெய் மிகவும் வியக்கத் தக்க வகையில் நிவாரணம் அளிக்கும். குளிர்காலத்தில் மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள்,  பூண்டுடன் 2 முதல் 3 ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடாக்கி, பின், இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும்.

2 /5

நல்லெண்ணெயில் அதிக மாய்ஸ்சரைசர் உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், மூட்டு வலிக்கு நிறைய நிவாரணம் கிடைக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாமிரம் போன்றவை நிறைந்துள்ள இந்த எண்ணெய் சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.

3 /5

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், எலும்புகள் வலுவடையும். பாதாம் எண்ணெயை லேசாக வெதுவெதுப்பாக சூடாக்கி, இந்த எண்ணெயைக் கொண்டு மூட்டுகளில் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நிறைய நிவாரணம் கிடைக்கும்.  

4 /5

குளிர்காலத்தில் பலருக்கு தலைவலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற விரும்பினால், தேங்காய் எண்ணெய் இதற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளதால், முழங்கால் வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.  

5 /5

மூட்டு வலிக்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. தசைப்பிடிப்பு, வலி இருந்தாலும், இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம்.