Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் நிலையில், அதை ஏன் உரிமைத்தொகையை போல் நேரடியாக வங்கியிலேயே செலுத்துவதில்லை என பலரும் கேள்வியெழுப்பினர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை (Kalaignar Magalir Urimmai Thogai) போன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வழங்கப்படும் 1000 ரூபாயையும் நேரடியாக வங்கி கணக்கிற்கே செலுத்தலாமே என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு உடன் ரூ.1000 ரொக்கமாக கடந்தாண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் வழங்கபட்டது.
அதற்கு முன் 21 பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. அதில் பல்வேறு புகார்கள் எழவே, ரூ.1000 ரொக்கமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது ரேஷன் அட்டைத்தாரர்கள் ரேஷன் கடைகளில் இந்த ரூ.1000 மற்றும் சிறப்பு தொகுப்பை பெற்றுக்கொள்கின்றனர். இதன்மூலம், தேவையான பொருள்களை மக்களே வாங்கிக்கொள்ளலாம் என்ற ரீதியில் வழங்கப்படுகிறது.
இது இந்தாண்டில் ரூ.1,500 அல்லது ரூ.2000 ஆக உயர்த்தப்படுமா எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், இந்தாண்டு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் (Pongal Special Gift Pack) வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கத்தை நேரடியாக கொடுப்பதற்கு பதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimmai Thogai) பயனாளர்களுக்கு செலுத்துவது போன்று வங்கிக் கணக்கில் போடலாமே என கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ரேஷன் அட்டைத்தாரர்களின் குடும்ப தலைவிகள், குடும்ப தலைவர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும், அவை ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டும். ஆனால், இவை இப்போதைக்கு சாத்தியமில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தனியாக விண்ணப்பம் பெறப்பட்டு அதன் மூலம் வங்கிக்கணக்கு பெறப்பட்டது. அதில் ரேஷன் அட்டைத்தாரர்கள் எல்லாரும் இணைந்திருக்க மாட்டார்கள். எனவே, அதை போல் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த முடியாது. மேலும், மினிமம் பேலன்ஸ் என்பதும் தற்போது பெரிய பிரச்னையாக உள்ளது.
இந்த சிக்கல்கள் இருப்பதால்தான் ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக மக்களின் கைக்கு ரொக்கமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் டிசம்பர் மாதக் கடைசியில் பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.