விண்கலன்கள் மற்றும் அவற்றை ஏவுவது தொடர்பான புகைப்படங்களை கண்டு ரசியுங்கள்…
விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வானவியல் மற்றும் புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டது. விண்வெளி ஆய்வில் தொடர் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. மனிதர்கள் பயணிக்கும், விண்கலன்கள் மற்றும் இயந்திர விண்வெளிக் கலன்கள் மூலமாகவும் விண்வெளி ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.
விண்வெளியிலுள்ள பொருட்களை அவதானித்து, அதில் இருந்து இந்த பிரபஞ்சத்தைப் பற்றி தெளிவாக அறிந்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளபப்ட்டுள்ளன.
மேம்பட்டு வரும் அறிவியல் ஆராய்ச்சி, பருவநிலை, கால நிலை ஆராய்ச்சி, மனித இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வது என ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகவே விண்வெளித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
டிசம்பர் 2021 டிசம்பரில் Gaganyaan செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் சிவன் இந்த பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை உறுதிப்படுத்தினார்... விண்வெளி மங்கையாக உருவாக்கப்பட்ட என் இனிய எந்திரா... வியோமித்ரா!!!
விண்வெளிக்கு பயணித்து அனுபவம் பெற்ற பெண்மணி ஐ.எஸ்.எஸ்., பெக்கி விட்சன்
Hope என்ற நம்பிக்கை விண்கலனை செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியது UAE
நாசாவின் காசினி விண்கலன்
நாசாவின் ஜூனோ விண்கலம்
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி - ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு வாகனம்
சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய விண்கலனை அனுப்பியது ஐக்கிய அரபு அமீரகம்
நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் விண்கலம் சந்திராயன் 1
இஸ்ரோ, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்ணுக்கு விண்கலன்களை அனுப்புகிறது
நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் விண்கலம்