ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், வெற்றிகள் குவியும்

Shani Nakshatra Parivartan: சனி பகவான் மார்ச் 15 ஆம் தேதி, சனி பகவான் முற்பகல் 11.40 மணிக்கு சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் கோச்சாரம் ஆகவுள்ளார். இங்கே அவர் 17 அக்டோபர் 2023 வரை தங்குவார். சுவாரஸ்யமாக, ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதி ஆவார். சனி பகவானை கண்டு அனைவரும் அச்சப்பட்டாலும், அவர் எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சனியின் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /6

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் மேஷ ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலம். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியில் சதய நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

2 /6

மிதுன ராசிக்காரர்கள் வாய்ப்புகளை நழுவ விடாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாகப் படிப்பு, வேலை தொடர்பான கனவில் இருப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

3 /6

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். பண வகையில் பல நன்மைகள் உண்டாகும். சதய நட்சத்திரத்தில் சனி இருப்பது இடமாற்றம், வெற்றி மற்றும் வேலையில் வெற்றிகளை கிடைக்கச்செய்யும். வேலை தேடுபவர்கள் சிறந்த சலுகைகளைப் பெறலாம். சனியின் ராசி மாறுவது தொழிலதிபர்களுக்கும் நன்மைகளை தரும்.

4 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். இந்த காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்காக குறுக்குவழிகளை கடைபிடிக்காதீர்கள். இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன, ஆகையால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

5 /6

சனியின் ராசி மாற்றத்தால் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இடமாற்றம் மற்றும் சம்பள உயர்வும் கூடும். அனைத்து துறைகளிலும் வெற்றி உங்களைத் தேடி வரும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.

6 /6

இந்த காலகட்டத்தில் நீங்கள் தொடங்கும் வேலை நீண்ட கால பலனைத் தரும். சனிபகவான் சதய நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி ஆவதால், வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வியாபாரத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லலாம்.